புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வினவு பகை

 

என் பெயரென்ன என்று கேட்கிறீர்கள்
944AFG4u77PPF என்கிறேன்
இப்படியும் ஒரு பெயரா? என்று முகம்சுளிக்கிறீர்கள்.
"எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டதற்கு
தெரியாத காலத்தின்
முன்பின்னிலிருந்து என்கிறேன்
இப்போது முகம் சுருக்குகிறீர்கள்.
"எங்கே வசிக்கிறாய்?" என்று வினவுகிறீர்கள்
"தொடர்பற்ற ஞாபகங்களில்" என சொல்லுகையில்
அதனைப் பகடியாக்க
ஒரு புன்னகையை என் இதழோரம் எதிர்நோக்கி
ஏமாறுகிறீர்கள்.
"எங்கே உறங்குவாய்?" என்று கேட்கிறீர்கள்
"யாருடைய கனவிலாவது" என்கிறேன்.
"பொய்" என்கிறீர்கள்.
"கடலுக்கு நடுவே என் அறையில்"
என்று சொன்னால்
மட்டும்
நம்பிவிடவா போகிறீர்கள்?