புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

 

 

சாக்லேட்டுக்கு அழுது
கண்கள் வீங்கவுறங்கும்
குழந்தைக்குக்
கிறிஸ்துமஸ் தாத்தாவாக

னவிலி நிலை நோயாளியின்
உயிர்த்துடிப்பு இயந்திரத்தில்
கிடைக்கோடாக

சாலையோரத்தில்
படுத்துக்கிடக்கிற
இடுப்புகளைத் தட்டியபடியே  நடந்து
கோணிபொத்திக் கிடக்கிறவளைத்
தன் லாட்டியால் நிரடி
புணர்வதற்குக் கவர்ந்து செல்லும்
காவலாளியாக

ன்னலைத் திறந்து
கைக்கெட்டுகிற  vபர்ஸ்,வாட்ச்,செல்ஃபோன்
இத்யாதிகளுடன்
சேர்ந்தவாக்கில் வந்துவிட்ட
ஆணுறையைத்
தெருவில் வீசினபடி
விசிலொலியுடன்
நடக்கிற கள்வனாக

டைசி இழுப்பு முடிவதற்குள்
வாழ்வாங்கு வாழ்வதற்கு
ஏங்கும்
பட்டாம்ப்பூச்சி சட்டைக்காரனாக

மூன்றுமுறை சுத்தியலால்
தட்டி அமைதியை கட்டளையிடும்
கோமாளியாக

ந்த இரவின்
யார் கனவின்
உபநடிகன் நான்?