புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வனம்

 

வனம்

கவிதை:ஆத்மார்த்திஉடல்களின் சாம்பல் வனம் அது.
உடல்களாலான சாம்பல் மரங்கள் பேயாட்டம் போடுகின்றன.
தம்மோடு தாமுரசி உதிர்ந்த உடல்களாலான சாம்பல் சருகுகள் பற்றி எரிகின்றன.
பலத்த சப்தத்துடன் உடல்களாலான பெரிய சாம்பல் பாறை விழுந்து நொறுங்குகிறது.
உடல்களாலான சாம்பல் மண் உதிர்ந்து சரிகிறது.
சாம்பல் உடல் மிருகங்கள் பயந்து தலைதெறிக்க ஓடியபடி சப்தமிடுகின்றன.
உடல்கள் ஒரு சாம்பல் நதியென வழிந்து சலசலக்கின்றது.
உடல்களாலான சாம்பல் வானம் இருள்கின்றது.
காய்ந்த உடல்களின் பட்டைகள் சாம்பல் பெருநெருப்பை உமிழ்கின்றது.
உடல்களின் சாம்பல் ஜுவாலை நெடிந்தோங்குகிறது.
உடல்களின் துளிகளைத் தூறல்களாய்த் துவக்குகிற சாம்பல் மழை வலுக்கிறது.
இன்னமும் உடல்களின் சாம்பல் நெருப்பு எரிந்து கனன்றுகொண்டிருக்கிறது.
உடல்களின் சாம்பல் மிஞ்சுகிறது.
சாம்பல் வனம் அது.
சாம்பல் மரங்கள் பேயாட்டம் போடுகின்றன.
ஒரு சொல் எரிந்த கதை இது.


Last Updated (Saturday, 01 December 2012 20:24)