புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மைதுனம் செய்யாத இரவு

மைதுனம் செய்யாத இரவு

நான் அவளைப் பார்த்த பொழுது
அவள் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அவன் முகம் சரியாகத் தெரியவில்லை.
அவளைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு
தன் டூவீலரில் அவன் சென்றுவிட்டான்.
அதன் பிறகு வெகுநேரம்
அவள் தனக்கான பேருந்துக்காகக் காத்திருக்க நேரிட்டது.
அவளை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை.
காத்திருப்பின் அயற்சியைத் தேக்கியவாறு
பேருந்துகளின் கணிதத்தைச் சபித்துக்கொண்டிருந்தாள்.
ஒருவழியாக அவள் காத்திருந்த பேருந்து வந்தது.
அப்படியொன்றும் கூட்டமில்லை.
அவளை ஏற்றிக்கொண்டு கிளம்பிச்செல்கையில்
ஒருமுறை
அவள் என்னைத் திரும்பிப் பார்ப்பாள்
என எண்ணினேன்.
அன்றைக்கிரவு
அவள் முகத்தை எப்படியேனும்
ஞாபகப்படுத்திவிட முயன்று தோற்றேன்.
பிறகு வெகுநேரம் கழித்து
உறக்கத்தில்
என் கழுத்தை ஒருவன் வாளால்
அறுத்துக்கொண்டிருந்தான்.