புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஒழுங்கறுதல்

பின் நவீனத்துவப் பாட்டி
சுட்ட
சர்ரியலிச வடையைக்
கொத்தினபடி
மாயா எதார்த்த வானில்
பறக்கிறது
கட்டுடைப்பின் காகம்.
புனைவிலகப்படாத நரியின்
கோரலுக்காகப் பாடுகிறது
அமைப்பியலின் பாடலை.
நிறங்கள் அழிகிற வானெங்கும்
ஒரு வடையின்
பல குமிழ்ப்பிரதிகள்
பறக்க
மெல்ல அழியத்தொடங்குகிறது
நேற்றின்
நாளைய கதை.