புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

உள்ளூரின் கடவுள்

தன்னைக்
கவனிப்பவர்களைக் கவனியாது
ஒரு சன்னலைச்
சார்த்துவதும் திறப்பதுமாக
எங்கெங்கோ பயணித்துக்கொண்டே
உங்கள் நம்பகத்தின் கண்ணெதிரே இருக்கிறாள்.
ஒரு சன்னிதான மூலவருக்குக்
கைங்கர்யமாகத்
தினமும் ATMவாசலைக்
கூட்டி மெழுகுகிறாள்.
முலைகள் வெளித்தெரிவது அலட்சியம்.
தன் முகத்தைப் பார்ப்பது குறித்து பரிதவிக்கிறாள்..
மாதவிலக்கு
நின்றதன் பின்
ஒரு சிறுமியாக மாறியிருக்கிறாள்.
ஒரு பட்டாம்பூச்சி
தன்னை ஒரு பட்டாம்பூச்சி
என்று உணருகிற தருணத்தில்
அவள்
தன்னை உள்ளூரின் கடவுள்
என்றறிவிப்பாள்.

Last Updated (Monday, 31 December 2012 00:06)