புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இங்கே

இங்கே
இருக்கிறேன்.
இருப்பதாக
நம்பவைக்கிறேன்.
இங்குதான்
இருப்பேன்.
இங்கேயே
இருப்பதாக
நம்பத்தொடங்கும்
பொழுதில்
வெளியேறியிருப்பேன்.
இங்கே இல்லை
என்று
முடிவெடுக்க எண்ணுகையில்
இங்கே இருப்பேன்.
ஒரு இரவைப்போல
மெல்ல
உள்நுழையவும்
ஒரு விடியல்போல
மெல்ல
வெளியேறவும்
அறிந்துகொண்டிருக்கிறேன்.
இங்கேயே...