புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஐந்து கவிதைகள்

என்னை
***********
எப்படிக் கொல்வது
என்று திட்டம்
தீட்டிக்கொண்டிருக்கிறோம்.
யாரேனும்
கதவை
உடைத்துக்கொண்டு வந்து
தடுத்து நிறுத்திவிடக்கூடும்
என்றொரு பயமும்
இல்லாமலில்லை.

ஆம்!
*******
நான் தான்
அதனைச் செய்தேன்
என்றெழுதி
கையொப்பமிட்டுக் கொடுத்தபின்
என்னை அடிப்பதை
நிறுத்திவிட்டார்கள்.

கனவு
********
திரிகூடராசப்பக் கவிராயர்
நேற்றென்
கனவில் வந்தார்.
முன்பொருதினம்
ஒரு அன்னியனாய்
அவர் கனவில்
நான் வந்தமைக்குப்
பழியெடுத்துவிட்டதாகச்
சொல்லிச் சென்றார்.

நிஜம்.
*******
நீ
சொல்வது
தான்
நிஜம்.
விடேன்.


அன்பு
********
அன்பாலே
தேடிய என்
அறிவுச்செல்வம்
ஷகீலா.

Last Updated (Sunday, 13 January 2013 16:51)