புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நாற்றம் அல்ல வாசனை

நாற்றம் அல்ல வாசனை
கவிதை: ஆத்மார்த்தி


நீங்கள் அன்பு எனச்சொல்வதை
நான் ஏமாளித்தனம் என்று சொல்கிறேன்.

நீங்கள் பிழை எனச் சொல்வதை
நான் ஒத்திகை என்று சொல்கிறேன்

நீங்கள் துரோகம் எனச்சொல்வதை
நான் தப்பித்தல் என்று சொல்கிறேன்.

நீங்கள் நம்பிக்கை எனச் சொல்வதை
நான் கபடம் என்று சொல்கிறேன்

நீங்கள் எதிர்பார்த்தல் எனச் சொல்வதை
நான் நடிப்பு என்று சொல்கிறேன்.

நீங்கள் சினேகிதம் எனச் சொல்வதை
நான் வியாபாரம் என்று சொல்கிறேன்.

நீங்கள் துக்கம் எனச் சொல்வதை
நான் ஒன்றுமில்லாதது என்று சொல்கிறேன்.

நீங்கள் அறியாமை எனச் சொல்வதை
நான் மௌனம் என்று சொல்கிறேன்.

நீங்கள் வாழ்தல் எனச் சொல்வதை
நான் பயணம் என்று சொல்கிறேன்.

நீங்கள் மரணம் எனச் சொல்வதை
நான் தியானம் என்று சொல்கிறேன்.