புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

FAKE

முகப்புத்தகத்தில் நான் வெகு நாட்களாக இருக்கிறேன்.
5 நிமிடத்துக்கு முன் எனக்கொரு புதிய தோழி கிடைத்தாள்.
அவளொரு நடிகையின் புகைப்படத்தை தன் ப்ரொஃபைல் படமாக வைத்திருந்தாள்.
ஆனாலும் அவள் பெயர் வேறு பெயராக இருந்தது.
அவள் அந்த நடிகை வசித்த அதே ஊரில் தானும் வசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தாள்.
என்றபோதும் இவள் நடிப்புத் தொழில் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கவில்லை.
அந்த நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில்
தனக்குப் பதினாறு வயது முடிந்து பதினைந்து வயது நடப்பதாகக் கூறியிருந்தாள்.
இவளோ தன் பிறந்த வருடத்தை 1975 எனத் தெளிவுபடுத்தி இருந்தாள்.
இவள் அந்த நடிகை மேற்கத்திய பாணி உடையணிந்து
ஒரு பனிப்ரதேசத்தில் அபிநயிக்கிற புகைப்படத்தை மாற்றிவிட்டு
பட்டுப்புடவையுடன் புன்னகைக்கிற புகைப்படத்தை வைத்திருந்தாள்.
தனிப்பெட்டியில் உரையாடுகையில்  
என்னை மிகவும் விரும்புவதாகவும்
நானில்லாது அவளால் வாழவே முடியாது என்றும் சொன்னாள்.
.நாம் பேசத்துவங்கி 5 நிமிடம் தானே ஆகிறது? என்று கேட்டேன்.
அவள் "அது வேறொரு பெட்டியில் இடுவதற்குப் பதிலாகத்
தவறி இங்கே இடப்பட்டதாக"த் தெரியப்படுத்தினாள்.
இன்னொருமுறை பேசலாம் என்று இணைப்பைத் துண்டித்தேன்.
என் கனவில் அவளைக் காதலுடன் நெருங்குகையில்
அந்த முகத்தில் தாடியும் மீசையும் இருந்தது.