புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஊரோடி

அவனொரு ஊரோடி..
அவன் சேகரித்தபடி செல்லும்
எப்பொருள் குறித்தும்
எந்த மதிப்பீடும் இல்லை
உம்மிடம்.
உம் கைப்பொருள்
எது குறித்தும்
அவனுக்கும் இல்லாதது போல்.
நீங்கள் போய்க்கொண்டிருக்கும்
இடம் குறித்து அவனுக்கு
எந்த அக்கறையும் இல்லை.
அவனது பயணக்குறிப்புக்கள்
நீங்கள் அறியாததைப் போல்
நீங்கள் பிரார்த்திக்கிற கடவுளர்கள்
பேசாதிருக்கிற
பிரகார இருள்மூலைகளில் முட்டித் திரும்புகிற
வவ்வாலினது போல வேறொரு பயணம் அவனது.
உங்களின் பல் வெண்மை குறித்து மகிழ்ந்துகொள்ளும்
அதே நேரத்தில்
அவனது காவிபடிந்த பற்கள் குறித்து அசூசை கொள்ளவும்
ஏலுகிறது உங்களால்.
தன் பாவனை வில்கொண்டு
எல்லா நிறங்களையும் அவன் வீழ்த்தியிருக்கிறான் என்று
அறியமாட்டீர்கள்.
காலம்
ஒருபுறம் நடப்பதை மறுபுறம் காட்டிக்கொடுக்கும்
கண்ணாடியாய்
அவனோடு
சேர்ந்து
கெக்கலித்தபடி
பயணிப்பதைப்
பைத்தியம் என்றே சொல்லிக்கொள்ளுங்கள்,