புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சில கவிதைகள்


எப்படியிருக்கிறாய்?
எனக்கேட்கையில்
ஏதோ இருக்கிறேன்
என்கிறேன்.
ஏதாயிருக்கிறேன்
எனக் கேட்பதேயில்லை
யாரும்.


எந்த நதி
என்றாராய்வதற்குள்
சுருட்டிக் காணாமலடித்தது
கனவில் வந்த வெள்ளம்.


சப்தகன்னிகை
உன்னைப் போலவே
இருக்கிறாள்
என்றபோதும்
நீயாக இல்லை.


இந்த
வாழ்க்கை
எப்படியோ போகட்டும்.
ஒரு கனவாவது
அகப்படுமா.?
சொல்லிக்கொள்ளும் படி.

அடுத்த வெள்ளகாலம் வரை
வாழ்ந்தாக வேண்டுமேயென
வறண்டநதியில்
புரண்டு புரண்டு அழுகிறான்
துரதிருஷ்டசாலி.
Last Updated (Friday, 01 March 2013 07:56)