புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்வாங்கு:

ஓடும்நதி  ஓடும்வரை ஓடம் அலையாடும்
ஆடுகையில் அள்ளும்நதி கொஞ்சமெனத் தீரும்
வாழ்தல் ஒரு நாகம் இது யாவும் சிறுநேரம்
தீநுனியில் தீண்டலுக்குள் தேகமொரு சாபம்.

கானல்கணம் நேருமொரு மாரியிந்தக் காமம்
காமம் வழிந்தோடும் வழி தேகமது மாறும்
காற்றுருண்டு  ஆடுகிற கூடு உந்தன் காயம்
நாடகத்திலாடும் பிழை நூலென உன் நேரம்.

நூறுநதி நூறுநிலம் பார்த்ததிந்தக் காலம்

காலநதி தீரத்தினுள் கால்நனைத்தல் யாகம்
உன்னிலொரு உள்நதியும் தீருமட்டும் ஈரம்.
வேறொருவன் காணுகிற ஓர்கனவு நீயும்.

சாம்பலென மாறுந்தினம் நூறுவிழிதேடும்
தேடுகிற காட்சிமட்டும் ஊர்நினைவில் ஆடும்'
சோறுபிண்டம் தேடிவரும் காகமெனக் காலம்
பேரெழுதும் ஓரிடமும் யார்க்குமில்லை போபோ