புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நிற்பதுவே நடப்பதுவே 1

நிற்பதுவே நடப்பதுவே 1

நேற்றைக்கு எனக்கு மட்டும் சொல்லிக்கொண்டு வாக்கிங் சென்றுகொண்டிருந்தேன்.
நான் அப்படி செல்வது எனக்கு மட்டுந்தான் தெரியும்.
அறிவிக்காமல் ஒளிந்து கொள்பவனைக் கண்டு பிடிக்க முடியாது என்பதைப் போல எனது செய்கை இருந்தது.
இந்த உலகில் யாருமே இல்லாத ஒருவன் இருக்கையிலும் தொலைகையிலும் அவனை யார் தேடப் போகிறார்கள்..?
இதை நினைக்கையில் எனக்கு லேசாய் அழுகை வந்தது.
எனக்கென்று யார் யார் இருக்கிறார்கள் என யோசித்தேன்.
மிகவும் உற்சாகத்தில் துள்ளத்தொடங்கிற்று மனம்.
எனக்கென இருப்பவர்களால் தான் என் மகிழ்ச்சி என நினைத்துப் பூரித்தேன்.
திடீரென்று ஒரு கணம் சற்று பக்கத்தில் ஏதோ சம்பாஷிக்கிற சப்தம் கேட்டது.
ரெண்டு நாரீமணிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

நான் ஒருவன் இருப்பது தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அறியாமல் அதை அப்படியே பகிர்கிறேன்.

"மூத்ததை டேன்ஸ்ல போட்டுருக்கேன்.ரெண்டாவது மாட்டேன்னு ஒரேஅடம்.அதை நீச்சல்லயும் பெயிண்டிங்க்லயும் போட்டுருக்கேன்.
என்றாள் ஒருத்தி.அதற்கு மற்றவள்
"எனக்கு அந்தக் கவலையே இல்லை.மூத்தது டான்ஸ்க்கு போட்டுட்டேன்..ரெண்டாவதும் மூணாவதும் கராத்தே நீச்சல் ரெண்டுக்கும்
போட்டாச்சு.
மீண்டும் முதலாமவள்.
"அம்மா வீட்டுக்கு போகறதுக்குத் தான் முடியவே இல்லை.இதுகளைப் பார்க்கணுமே...லீவுல நாலு நல்லதை திணிச்சா தான் உண்டு.
இதற்கு ரெண்டாமவள்.
"அப்பிடி இல்லை..நான் வர்ஷம் முழுக்க மூத்ததுக்கு பரதம் குடுத்துக்கிட்டே தான் இருக்கேன்..இது வெக்கேஷன் என்கிறதால வெஸ்டெர்ன்
டான்ஸ்ல போட்ருக்கேன்.
"எப்பிடியோம்மா...எனக்கு இப்போ கவலை எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்..மூத்ததை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி ஸ்விம்மிங்பூல்ல
தள்ளிவிட்டுடணும்..இல்லைன்னா கஷ்டம்..
ஆமாமா...இனிமேல் வர்ற காலத்துல ஒவ்வொரு வெக்கேஷன்லயும் எதுலயாச்சும் போட்டுக்கிட்டே இருக்கணும்..இன்புட் ரொம்ப
அவஸ்யம் இல்லையா..?

எனக்குக் கிறுகிறு என்று வந்தது.


ஏதோ சாம்பாரில் உப்புப் போடுகிறாற் போல எலுமிச்சைப் பழத்தை ஊறுகாய் போடுகிறாற்போல என்றெல்லாம் ரெண்டு வாசகங்கள் என் மனதில் தோன்றின