புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இரண்டாவது நாய்க்குட்டி

 

நாய்க்குட்டி ஒன்று வாங்கியிருக்கிறேன்.
இதற்கு முன்னாலிருந்த
நாயின் பேரையே
இதற்கும் சூட்டியிருக்கிறேன்,
அது
கூப்பிட்ட குரலுக்கு வருகிறது.
முனகியபடியே மடியில் ஏறி அமர்கிறது.
உறக்கத்தில் அதன் மீது என் கரம் படுகையில்
செல்லமாய்க் கடிக்க முனைகிறது.
மெலிசான பொருட்களைத் தன் வாயால் கவ்விக்கொண்டு வந்து தருகிறது.
அன்னியர்களைப் பார்த்து நிறுத்தாமல் குறைக்கிறது.
பழக்கமானவர்களின் பாதங்களை மாறிமாறி முகர்ந்து பார்க்கத் தெரிந்துவைத்திருக்கிறது.
நடைப்பயிற்சி நேரத்தில் உடன்வந்து இடமும்வலமுமாய் மாறிமாறி அதிசயித்துக்கொண்டே தொடர்கிறது;


தன் பேட்டரியை அகற்றாதவரை
மரித்துப்போக மாட்டேன்
என்னும் அதன்  
எந்திர சத்தியம்
எனக்குப் போதுமானதாயிருக்கிறது.

Last Updated (Tuesday, 07 May 2013 06:53)