புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வராமற்போன தேவன்


உன்னதமான சங்கீதத்தைக் கேட்கத் தலைப்படுகிறாயா..?

கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டபோது
கேள்வி ஒன்றை எழுப்பியதற்காக சுட்டுத் தள்ளப்பட்டபோது
நாடுகளைப் பிடிக்கும் ஆவலாதியில் கிளம்பியவனின் எதிர்த் திசையில் வந்தபொழுது
ஒரு மொழியை அறியாமல் இருந்தபொழுது
ஒரு கருவியைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்தபொழுது
ஒரு புதிய தெய்வத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தபொழுது
என் தங்கம் என் உரிமை என்றெல்லாம் குரல் எழுப்பிய பொழுது
கூட்டம் கூ
ட்டமாகக் கொல்லப்பட்ட பொழுது

வாசிக்கப்பட்டதென்னவோ இதே இசைதான்.
இந்த இசையின் வேறு இசையாக இருந்திருக்கக் கூடும்.

கேட்கச் சித்தமாயிருக்கிறாயா

வராமற்போன தேவன் இன்னமும் வந்துகொண்டிருக்கிறான்
என்ற நம்பிக்கையில் கரமொற்றிக் கண்கலங்கி
"எம் தேவனே....எம்மை ஏன் கைவிட்டீர் என்று
கேவலுடனே முடிந்துபோனவர்களின்
கடைசிச் சப்தம்
இந்த இசையின்
இடைக்குரலாக உடனொலியாக
குருதிவழியும் அதன் தொனியாக
எல்லாமும் இருந்துகொண்டிருக்கக் கூடும்.

இந்த இசை உன்னதமானது.
ஒரு நகரம் பற்றி எரியும் போது
பிணங்களின் மெழுகுகளைத்
தன் போ" மீது பூசிய ஒருவனின்
வயலின் எழுப்பக் கூடிய பேரோசை.


ஒரு கையெழுத்தில்
தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய
உயிர்களின் எண்ணிக்கையைப் புறந்தள்ளினபடியே
போரின் புனிதத்தைப் பறைசாற்றுகிற உன்னதமான இசை அது.

கேள்

இந்த இசையை.
அதன் பிற்பாடு

துன்பம் நேர்கையில்
யாழ்
எடுத்து
நீ
இன்பம்
சேர்க்கத்
தெரியாதா
உனக்கு