புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள்ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள் அலாதியானவை.

தட்டப்படாத கதவுகளுடனான ஓரிடம்.
தடையிலா மின்வசதி இன்னபிற அவஸ்யம்.
ஒளிபொங்குகிற படுக்கயறையின் சுற்றுச்சுவர்களில்
முலைப்பால் வெண்மையோ அல்லது ஐஸ்க்ரீம் நிறமோ பூசப்பட்டிருப்பது உத்தமம்.
சுற்றிலும் கேமிரா சுழலும் வண்ணம் வாகான மையத்தில்
கட்டில் இடமாற்றப்படுகிறது முக்கியம்.
கடிகாரம்,சுவர்ப்படம், எனத் தேவையற்ற எந்தப் பொருளும்
இல்லாமல் பார்த்துக்கொள்வது சூட்ஷுமம்.
அறையுள் இணைந்தாற்போல்
மேற்கத்திய பாணிக் கழிவறை சௌகர்யம்.

எளிதில் அகற்றிவிடக்கூடிய உள்ளாடைகள் அணிவித்துக்கொண்டு
காத்திருக்கிற அவன் அவஸ்தையினூடே புன்னகைக்கிறான்.
அவளோ பல அர்த்தங்களை  சூயிங்கத்தோடு மென்றுகொண்டிருக்கிறாள்
கேமிராவைக் கையாள்பவன் அவர்கள் இருவருக்கும்
எந்த வரிசைப்படி என்னென்ன செய்யவேண்டும் என்ற கதையை விவரிக்கிறான்.
அதனைக் கவனமெடுத்துக் கேட்டுக்கொள்கிறார்கள் இருவரும்.
என்னென்ன செய்யக் கூடாது என்பதை அவள் நினைவுபடுத்துகிறாள்
மெல்லிய குரலில் கண்டிப்புடன்.
தன் தலையசைப்பின் மூலமாக
அங்கே நடக்கப்போவதன்
முழுப்பொறுப்பையும் தானேற்பதாகக்
கூறுகிறான் கேமிராக்காரன்.

முந்தைய தினத்தின் பிற்பகுதியிலிருந்தே
உபவாசம் இருந்துவந்திருக்கிற அவள்
சீக்கிரம் துவங்கச் சொல்லுகிறாள்.
அவளது நாக்கின் மத்தியில்
வருடும் சலங்கையொன்றை அணியவேண்டியிருப்பதை
ஞாபகப்படுத்துகிறான் கேமிராக்காரன்
மன்னிப்புக் கோரியபடியே
அவள் சலங்கைமணியை அணிந்துகொள்கிறாள்.
தன் உடையின் பொத்தான்கள்
எளிதில் திறந்துகொள்கின்றனவா என
சரியார்க்கின்றனர் இருவரும்.
கேமிராவைக் கையாள்பவன் தன்
கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறான்.
அவர்கள் இருவரும்
அந்த அறைக்குள் நுழைகின்றனர்.
விளக்குகள் உயிர்பெறுகின்றன.