புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காணாமற் போனவர்களின் கடவுள்காணாமற்போனவர்களின் கடவுளுக்கு
பெருத்த காதுகள்
நீண்டு தொங்கும் நாவு
குழியென்று சிறிய நாசி.
சொல்லிக்கொள்ள ஏதுமற்ற உடல்வாகு.
நெடியதும் சிறியதுமான இருகரங்கள்.
கட்டையாலானதும் நிஜமானதுமாய்க் கால்கள்.

விலாவில்
அடையாள அட்டையைச் செருகி
ரகசிய எண்ணை ஒற்றியதும்
காணாமற்போனவர் பற்றிய தகவலை
உள்ளீடு செய்யவியலும்.
வயிற்றிலிருந்து
வருகிற பிரிண்டவ்ட் காகிதத்தில்
உங்களுக்கான கேவியழும் உரிமை எண்
குறிப்பிடப் பட்டிருக்கும்.

காணாமற் போனவர்களைக் குறித்து
எங்கேயும் எப்போதும் நீங்கள்
அழுதுகொள்வதற்கான அனுமதிச்சீட்டு அது
காணாமற்போனவர்கள் திரும்பக் கிடைப்பது
குறித்து உத்திரவாதம் ஏதுமில்லை.
அத்தனை பலஹீனமாயிருந்த போதும்
ஒரு கடவுளிடம் முறையிட்டோம் என்ற
ஆன்ம நிறைவுக்கானது
இந்தக் கடவுளென்னும் ஏற்பாடு.