புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சிரிக்கும் கடவுள்

ட்டணக்கழிப்பறையில்
வசூலிப்பவனிடம்
பத்துரூபாய்த் தாளை  நீட்டி
மிச்சம் சில்லறை வாங்கி
வேகவேகமாய் உள் நுழைந்து
காலியாய்க் கிட்டிய
பிறையை அணுகும் தருணம்
என்னைத் தள்ளியபடி
முன் ஆக்கிரமிக்கிற ஒருவனின்
முதுகைச்சபித்தபடி
நிற்கிறேன்.
சோகையாய்ச் சிரித்து
"எனக்கு சுகர் சார்.அதான்.சாரி"
என்றபடியே
விலகிப்போகிறான்.
இன்றோ நாளையோ
அவனென்
கனவில் எதிர்ப்படுகையில்
எனக்கு வழங்குவதற்கு
அவனிடம்
கருணையிருக்க வேண்டுமே
என்று பேதலிக்கிறேன்.