புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பேச்சிலர்

இன்றைக்கு


"குளிர்சாதனத்துக்குள் உறைந்திருக்கிற

பால்பொட்டலத்தை வெளியில் எடுத்துச் சூடுபண்ணிவைக்குமாறும்"

"முற்றத்துத் துளசிக் கீழ்ப்பொந்து சிறு எலிக்கானது,
அரவத்துக்குரியதன்று" என்றும்

"வாடகை நூல்நிலையத்தில்

மாற்ற வேண்டிய புத்தகங்கள் தொலைக்காட்சிக்கு மேற்புறம் உள்ளதெனவும்"

"பள்ளிவிட்டு வந்தவுடன் பாப்பாவை

ஹோம் ஒர்க் செய்யவைத்தபின்னரே விளையாட அனுமதிக்குமாறும்"

"எல்.,சி பணம் கட்டிவிட்டு வருகிற வழியில் காப்பித்தூள் வாங்கிவருமாறும்"

மாடிவீட்டு வேணி கணவனிடம் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்புகிறாள்.

நேற்றைக்கு


"ஒலித்துக்கொண்டே இருக்கின்றன உன் வார்த்தைகளென்றும்"

தனிமையைத் "தனிமை!" யென்றும்

"வாதைகளை வாதைகளென்றும்"

தொட்டிக்குள் திரிகிற மீன்களில் ஒருத்தி தானென்றும்

சுவரில் ஒட்டியிருக்கிற ப்ளாஸ்டிக் வண்ணத்துப்பூச்சி கண்ணயர்வதற்குள்:

பூத்துச் செழிக்கிற செம்பருத்தி உதிர்வதற்குள்
தன் கொலுசொலி வீடுமீளுமென்றும்

"வாழ்க்கை வாழப்பிடிக்கவில்லை" எனவும்

கிடைத்த 5 நிமிடத்தனிமையில் என்னிடம் சொல்லிவிட்டுப் படியேறிச்சென்றாள். வேணி.


நாளைக்கு

வேணி கேட்டுக்கொண்டபடி நான் அவளை சந்திக்கப்.....