புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கேலிச்சித்திரங்கள்

மழையின் கோரநடனம்
பிய்த்துப் போன குடிசைகளுக்குள்
முளைத்துநிற்கின்றன மலட்டுக்குறிகள்
.

லாடம் அடிக்கிறவனின்
செருப்பிலூடுருவும் சிறுமுள்
பெருமழைக்கு முந்தைய காற்றீரமாய்
..

சாவுச்சேதி கொணர்பவன்
வழித்தடமெங்கும் வாசிக்கிறான்
மரணத்தின் மெல்லிசையை
.

பாவனைநூல்கள்
செவிமடுப்பதில்லை
ஆயுதக்கூர்மைகளுக்கு
.

எப்பெரிய
மௌனத்தைக் கைவிடுவதற்கும்

ஒரு சொல்போதுமானதாயிருக்கிறது

ழமூதாட்டி
வரவேற்றணைக்கிறாள்
வீசியெறியப்பட்ட கல் வெம்மையை
.

நிழல்
தீர்மானிக்கட்டும்

ஒருபயணத்தையாவது.

ராதனைப் போழ்து
மனித தரிசனத்துக்காக
ஏங்கிக்கிடப்பவன் தனிமைக்கடவுள்
.

கண்ணீர்த்துளிகளின்
கனத்தைஅறிவதில்லை
கேலிச்சித்திரத்தின் கோடுகள்


 

Last Updated (Monday, 23 September 2013 12:14)