புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுச்சொல் 3

கடவுச்சொல் 3 உரையாடல் தொடர்கிறது.

 

த்மஜா நாராயணன் ஒரு வங்கி ஊழியர்.அதிரத் தெரியாத குரலுக்குச் சொந்தக்காரர்.மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் என்றொரு கவிதை நூலை எழுதியிருக்கிறார்.பாசாங்கற்ற கவிதைகள்நேரடியான எழுத்துமுறை ஆகியன குறிப்பிடத் தக்கவை.சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில்அந்தப் புத்தகத்துக்கான அறிமுக/விமர்சனக் கூட்டம் ஒன்றில் பேச என்னை அழைத்திருந்தார்.இது  நடந்தது இந்த ஆண்டின் முற்பகுதியில்.
மிழச்சி தங்கப்பாண்டியன் தலைமையேற்றுப் பேசுவதாக ஏற்பாடு.தமிழச்சிக்கும்  எனக்குமான அறிமுகம் இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் உயிர்மை சார்பாக நிகழ்ந்த ஒரு இலக்கியக் கூட்டத்தின் அரங்கிற்கு வெளியே நண்பன் அமிர்தம் சூர்யா என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.முதன்முறை பார்க்கிற அன்னியத்தனம் ஏதுமற்ற தன் புன்னகை மற்றும் வார்த்தைகளால் என்னை வசீகரித்தார் தோழி தமிழச்சி. அவரது அருகன் நூல்வெளியீட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.அதன் பின் அவரது
அப்பா குறித்து அவர் எழுதிய மரப்பாச்சியும் பாப்கார்னும் தொடரின் ஒரு கவிதை என்னை உலுக்கியது. அதற்காகப் பேச ஆரம்பிக்கையில் ஆரம்பித்தது நன்னட்பு.
மிழச்சி வருவதற்கு முன் வட்ட வடிவமாக அமர்ந்து டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நான் பாரதிமணி பத்மஜா சுந்தர்ஜி
உள்பட பலரும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு உரையாடலை சட்டென்று நிறுத்தி விட்டு அதையே ஒரு கூட்டமாக ஒரு நிகழ்வாக மாற்றுவதில் பல அசௌகரியங்கள் இருக்கத் தான் செய்கின்றன.நல்லதொரு நதியோட்டத்தை நறுக்கென்று மணல் கொட்டித் தீர்த்தாக வேண்டும். ஆனால் இதனைத் தவிர்ப்பதும் கடினம். அன்றைக்கு அரங்கத்தில் நுழைந்த தமிழச்சி அதே உரையாடலைத் தொடரலாமே என்று சொன்னார். அது ஒருவகையில் கூட்டமாக மாறியபோதும் அதற்கு முன்பிருந்த தொனி மாறாமல் இருக்க முக்கியக் காரணமாயிற்று..
நான் பேச அழைக்கப்பட்டேன்.அந்தக் கவிதைத் தொகுப்பு பற்றி சம்பிரதாயமாக பேசுவதைத் தவிர்க்க விரும்புவதாக கூறினேன்.பெண்களோடு நட்புக்கொள்வதில் ஆண்களுக்கு இருக்கக் கூடிய சிரமங்களைப் பட்டியலிட்டேன்.ஒரு ஆடவன் ஒரு பெண்ணோடு நட்புக்கொள்வது எழுத்துலகிலும் கூடத் தளைகளும் தடைகளும் நிரம்பியதாகவே இருப்பதை வருந்தினேன்.பத்மஜா நாராயண்னுக்கும் எனக்கும் இடையே இருக்கிற நட்பு அதிகரிக்குமோ என்னவோ தெரியாது ஆனால் நிரந்தரிக்கும் என்று பகிர்ந்தேன். தமிழச்சியின் அன்றைய பேச்சு அற்புதமாக இருந்தது.அவர் பேசி நேரடியாக நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு அது.தமிழச்சி என் பேச்சைக் குறிப்பிட்டு அத்தகைய தடைகளை நாம் தகர்க்காமல் வேறார் தகர்ப்பது நண்பனே..என்று கேட்டார்.ஒரு உரையாடல் வெற்றி பெறுகிற இடம் அதுதான்.ஒரு வினா விடையற்றதாகத் தொண்டைக்குழி அறுந்து தொங்கிடக் கூடாது.அததற்கான பதில்களை யாரேனும் தத்தமது ஆழமனசில் இருந்து எடுத்தெறிகிற தருணம் மகத்தானது.
தே கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருக்கையில் பாரதியின் வரிகளில் எனக்கு மிகவும் வியப்பளிக்கிற வரி என்று "ஒரு குழந்தையை வையாதே பாப்பா"என்ற வரியைக் குறிப்பிட்டேன். குழந்தைகளின் உலகில் இத்துணை நுட்பமாக மொழியைக் கையாண்டவன் பாரதியொருவர்ன் என்றேன். உண்மையில் மிக அமைதியாக ஆனால் நுட்பமான பல சங்கதிகளுடன் அந்த விழா
நடந்தது.இது நிகழ்ந்து ஒரு வருடம் கழித்து மதுரை புத்தகத் திருவிழாவில் சந்தியா அரங்கிலிருந்து வெளியேறி நடந்து கொண்டிருந்தேன்.எதிரே வந்தவர் அவருக்கு ஒரு 27 வயது இருக்கலாம்.வணக்கம் சார். என்றார்.பதிலுக்கு வணக்கம் சொன்னேன்.மனக்குகைச் சித்திரங்கள் குறித்தெல்லாம் பேசிவிட்டுக் கை கொடுத்தார்."குழந்தையை வையாதே பாப்பா.."என்னும் வரி பற்றி நீங்க சொன்னது அருமையா இருந்தது சார்.அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு அந்த வரி எனக்குள்ள அதிர்ந்துகொண்டே இருந்தது"என்றார்.
ந்த உரையாடலையும் யாரும் தொடங்குவதுமில்லை.முடித்துவைப்பதுமில்லை என்று எப்போதோ வாசித்தது ஞாபகம் வந்தது.உரையாடல் தொடர்கிறது.அன்போடு
ஆத்மார்த்தி
02/10/2013

Last Updated (Wednesday, 02 October 2013 04:32)