புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தனித்திருக்கும் உடல்களின் இரவு


இரவு இருண்டு கிடக்கிறது.
அதன் உடல் ஒரு நோயுற்ற சர்ப்பத்தைப் போல நெளிகின்றது.
காற்றறுந்த தேசலாய்  பொழுது உறைகிறது
கானல் ஆயம் போலத் தனித்துக் கிடக்கின்றது விடியல்.
சாட்சியமற்ற இருள் சந்தில்
ஓலமிடுவதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காமல்
சட்டென்று அறுக்கப்பட்டவனின் குரல்வளையிலிருந்து
பீறிடும் குருதியெனப்
பெருக்கெடுக்கிறது வாதை
சரிந்து கிடப்பவன்
எப்போதோ எடுத்துக்கொண்ட
சிரித்த முகத்தின் புகைப்படத்திற்கு
ஆறு பத்திகளுக்கு மேலே
திசையறியாது
இன்னொரு தரம்
பயணிக்கவிருக்கிற
கோட்டுச்சித்திரக்காரனின்
பெயர் சிந்துபாத்.


ஆத்மார்த்தி

Last Updated (Saturday, 19 October 2013 04:21)