புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நனவிலி

1
உரியவர்
யாருமிருப்பின்
வந்து
அழைத்துப்போங்கள்.
நனவிலியில்
நுழைவதற்குச்
சித்தமாயிருக்கிறேன்.

2
இந்த
நனவிலிதான்
எத்தனை
அழகு
ஞாபகந்தான்
எத்தனை
அழுக்கு

3.
ஒரே
அடி
ரெண்டாய்ப்
பிள
என்னை.
பாதிக்கிணற்றில்
பல்டியடிப்பவனைப்
போல்
கெக்கலிக்குது
நனவிலி

4.
யாரும் நம்பத்
தேவையில்லை.
நனவிலி
ஒரு
பறவை

5.
நனவிலி
தேவாம்சம்
மரணம்
மகாவரம்

6.
பிற
இற
நனவிலி
திரிசங்கு.

7
அத்தனை
ஆதுரமாய்
ஆயுளை
நீட்டித்துத் தர
வேறொன்றுமில்லை.
நனவிலி

8.
தப்புகிறவனின்
தாகசாந்தி
நனவிலி.
விடுதலை
வெகுதூரமரணம்