புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சகலகலா

சகலகலா

அவர் பெயர் மிஸ்டர் மோ.
கூட்டங்களில் தென்படுவார்.
தனித்துத் தெரிவதற்காக
முகத்திலாவது
கேசத்திலாவது
எதையாவது
முயற்சித்துப் பார்ப்பது
அவர் ப்ரியம்.
அவரொரு பேசாவீரர்.
தவக்காலத்து முனிபுங்கவரைப் போல்
தாம் தெரிகிறோமென்று கருதிக்கொள்வார்.
ஆனால்
விஷமக்காரர்களைத் தடுக்கவியலாத
பருத்த காவலாளி போலத்
தாம் தெரிவதை அவரறியார்.
கிட்டப் பழகியவர்கள் அவரொரு "சகலகலா"
என்றே குறிப்பிடுவது வழக்கம்.
என்றபோதும்
அவரது காலம்
மகா நகரக்
குடத்தில் தவறிவிழுந்த
குண்டுபல்பாகவே
கழிந்துகொண்டிருக்கிறது.
ஒரே ஒரு பிரச்சினைதான்
மிஸ்டர் மோவுக்கு.
முன்னரெப்போதோ
அவர் கண்ட கனவில்
தரையில் ஆர்ப்பரிக்கும்
கூட்டத்தினரைப் பார்த்துத் தான்
நின்று கையசைத்த
உப்பரிகைக்குக்
கூட்டத்திலிருந்து எப்படிச்செல்வது
என்ற சூட்சுமத்தை
எவ்வளவு "கூகுள் பண்ணி"னாலும்
கண்டுபிடிக்க முடியவில்லையாம்.