புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 2

ஒரே ஒரு மாலை

ள்ளி இறுதி வரைக்கும் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டிருந்தேன்.கல்லூரியில் இளங் கலை வணிகம் சேர்ந்த போது ஏதோவொரு தைரியத்தில் ஆங்கிலத்தைத் தேர்வு மொழியாகத் தேர்ந்தெடுத்தேன்.பள்ளிகாலத்திலெல்லாம் படிப்பில் சுமார் மார்க் குமார் ஆக இருந்தவன் பட்டப் படிப்பில் துறைமுதலானாக வெளியேறினேன்.என் கல்லூரிக் காலத்தின் செழுமைகளாக இவற்றோடு ஒரு கைவராக் காதலையும் சேர்ந்து சொல்லலாம்.மூன்றாண்டுகள் பட்டம் முடிப்பதற்கு நடுவே அப்பா இறந்து போனார்.

ப்பாவின் மரணம் முன்பே பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிவிட்டிருக்க வேண்டும்.தன் இறுதி ஏழு வருடங்கள் அவர் முன் பழைய வாழ்விலிருந்து முற்றிலும் வேறோரு வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்டார்.ஒரு நல்ல நண்பனாகவே அவரை உணர்கிறேன்.கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக ஒரு நாள் மரித்துப் போனார் அப்பா.விஷயம் அப்பா பற்றியதல்ல.அவர் மரணம் எனக்குள் நேர்த்திய அதிர்வு பற்றியது.அதற்குப் பின்னால் மிக மெலிதான மனச்சிதைவுக்கு ஆளானேன்.எதைப் பார்த்தாலும் பயம்.சிறுநீர் கழிப்பதற்குக் கூடத் தனியே செல்லவியலாத அளவுக்கு பயம் என்னை ஆட்கொண்டது.எப்படியும் மிகச்சமீபத்தில் மரணம் என்னை விழுங்கப் போகிறது என்று விதவித விபரீதமாய் பயந்துகொண்டிருந்தேன்.மருத்துவம் எனக்குச் சில மாத்திரைகளை அளித்தது.அவை யாவும் மன நலம் சார்ந்ததல்ல என்பதைப் பின் வெகு காலம் கழித்தே அறிந்து கொண்டேன்.எல்லாம் வைட்டமின் மாத்திரைகள் தான்.ஆனாலும் எனக்கு எதுவும் இல்லை என்று சொன்னால் நான் என் மருத்துவரை மறுதலிப்பேன் என்பதை உணர்ந்து கொண்ட அவர் "உனக்கு வந்திருப்பதை இந்த மாத்திரைகள் குணமாக்கும்"  என்று சொல்லி வண்ண வண்ண மாத்திரைகளைக் கொடுத்தனுப்பினார்.அவற்றைத் தினமும் பகல் பன்னிரெண்டு மணிக்கு சாப்பிட்டாகவேண்டும் என்று கட்டாய அறிவுறுத்தல் வேறு.அதைச் சில மாதங்கள் உட்கொண்டேன்.

னால் ஒரு தினம் என் கையில் இருந்த மாத்திரைகளைச் சார்வதை நிறுத்த இயன்றது.பாலகுமாரன் சுஜாதா இருவரின் சில அல்ல அதுவரைக்குமான பல நூல்களைத் தொடர்ந்து படித்தேன். இளையராஜாவின் சில பாடல்களைக் கேட்டேன்.என்னால் அவற்றுள் ஆழ முடியவில்லை.என்ன செய்து தப்பிப்பது என்று தெரியாத போது என் வாழ்வின் முக்கியமான நண்பர்கள் சிலர் உள்ளும் புறமும் உடனிருந்தார்கள்.மயக்கத்திலிருப்பவனைச் சுமப்பது போல் என்னைச் சுமந்தார்கள்.எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு செயல்களான வாசிப்பும் இசையும் கூட என்னைக் காப்பாற்ற முடியாமற் போவது எனக்குள் பெரும் துக்கமாக உருவெடுத்தது.ஏற்கனவே தந்தையை இழந்ததன் சோகமும் வாழ்வின் எதிர்பாராமை தந்த வெறுமையும் சேர்த்து அழுத்திக் கொண்டிருந்ததும் கூறத் தக்கது.மொத்தத்தில் கண்கள் பஞ்சடைந்து என் வாழ்வின் மிக முக்கியமான உக்கிரமான நோய்மைக் காலத்தில் இருந்தேன்.

ப்ரியமான பாடல்களைக் கேட்டால் விளையவேண்டிய இன்பமோ அமைதியோ ஏற்படாமல் மாறாக அவை வெறும் ஓசைகளாகவே என்னுள் ஆர்ப்பரித்தன.அதுவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பாடல்களையும் இடை நீக்கம் செய்ய நேர்ந்தது.அப்போது தான் ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றைக் கேட்க நேர்ந்தது.எனக்கு ஆங்கிலம் ஓரளவு தான் புரியும்.பாடல்கள் எல்லாம் சத்தியமாகப் புரியாது.அதற்கு முன்பு கூட ஹிந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறேனே தவிர ஆங்கிலப் பாடல்களை அல்ல.ஆனால் அந்தக் கால கட்டத்தில் மொத்தம் பத்துப் பதினைந்து ஆங்கிலப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.ஒவ்வொரு பாடலையும் சுமார் ஐந்தாயிரம் முறை கூடக் கேட்டிருப்பேன்.அவற்றை மட்டுமல்ல.அந்தக் குழப்பமான காலவெளியில் சில தமிழ்ப் பாடல்களையும் கூட திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.அவற்றை அதற்கு முன்னால் சாதாரணமாய்ப் பிற பாடல்களோடு கேட்டது தான்.ஆனால் இந்தக் காலத்தின் இருண்மைக்குள் அந்தப் பாடல்களை ஏன் தெரிவுசெய்தேன் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
வினோதமில்லையா..?கேட்ட பெரும் எண்ணிக்கையிலான பாடல்களைக் கைவிடுகிறேன்.இது முதல் படி.முற்றிலும் புதிய ஆங்கிலப் பாடல்களைத் தேர்வு செய்கிறேன்.இது இரண்டாம் படி.அவற்றோடு சிற்சில தமிழ்ப் பாடல்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.என் துக்கத்துக்கான பிரத்யேகமான இசை மாலை ஒன்றை நானே நெய்கிறேன்.அந்த ஒரே ஒரு மாலையை மட்டும் நாட்கணக்கில் விடாமல் திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான முறைகள் கேட்டபடி இருக்கிறேன்.இது மூன்றாம் படி.இப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே என் வாழ்க்கையின் இருளடர்ந்த காலம் ஒன்றைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பது தான் சொல்ல வந்த சேதி.

ந்தக் காலகட்டத்துக்குப் பின்னால் அந்தப் பிரத்யேகமான இசைமாலையின் எந்த ஒரு பாடல் மீதும் தனிக்கவனமோ பிடிமானமோ இன்றுவரைக்கும் இல்லை என்பது தான் வியப்பைத் தருகிறது.சந்தர்ப்பவாதமாக போலியான காதல் போல வெகு சில பாடல்களைக் கையாள முடிந்திருக்கிறது இல்லையா..?அந்தப் பாடல்கள் இன்றைக்கு மற்ற சாதாரணப் பாடல்களைப் போலவே பலவுள் சிலவாகக் கடலுள் நதியாகக் கரைந்து காணாமற் போயிருக்கின்றன.ஆனால் அந்தக் காலகட்டத்தில் எனக்கு அவை வேறு.வெகு அத்யந்தமான பாடல்கள்.வெகு அந்தரங்கமாக எனக்குள் இயங்கியிருக்கின்றன.முன்னும் பின்னும் இருந்த இருக்கின்ற நான் என்பவன் ஒருவன் என்றால் அப்போதைய நான் என்னும் இன்னொருவனை ஆற்றுப்படுத்திய தங்கக் கரங்கள் அப்பாடல் களினுடையவை அல்லவா..?இசையில்லாத வாழ்வு பாழ் என்றான் நியெட்ஷே.அது தான் எனக்கும் நிகழ்ந்தது.

ந்த இருண்மை காலப் பாடல்களை இங்கே தருகிறேன்.இன்னும் அவற்றை எல்லாம் மொத்தமாய் தொகுத்து நோக்கினால் அவற்றுக்கிடையே இருக்கக் கூடிய ஒரே பொது ஒற்றுமையாக நான் மட்டும் தான் இருப்பேன்.அந்த நானாக இருந்ததும் நான் தானே..?

தமிழில்

1.நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்(மறுபடியும் இசை இளையராஜா பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
2.அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் (குணா இசையும் குரலும் இளையராஜா)
3.தொட்டு விட நான் தொட்டுவிடத் தான் இந்தப் பட்டு உடல் பூப்பூக்கும் (கறுப்பு ரோஜா இசை எம்.எஸ்.வி.ராஜா பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
4.ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே (ஆவாரம்பூ இசையும் குரலும் இளையராஜா)
5.உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் (குணா இசை இளையராஜா பாடியவர் எஸ்.ஜானகி)
6.நல்லதோர் வீணை செய்தே (பாடல் பாரதி இசை எம்.எஸ்.விஸ்வநாதன் படம் வறுமையின் நிறம் சிவப்பு)
7.பூங்கொடி தான் பூத்ததம்மா (இதயம் படம்.இளையராஜா இசை.பாடியது எஸ்.பி.பாலசுப்ரமணியம்)


ஆங்கிலத்தில்  (இவற்றுக்கான யூட்யூப் சுட்டிகளுடன்)


BACK STREET'S BACK
EVERYBODY
https://www.youtube.com/watch?v=6M6samPEMpM

you are still the one
Shania twain
https://www.youtube.com/watch?v=KNZH-emehxA

the boy is mine
brandy and monica
https://www.youtube.com/watch?v=Nx-ilJfn76o

be alone no more
another level
https://www.youtube.com/watch?v=avl14kvAxDM

no no no
destiny's child
https://www.youtube.com/watch?v=XQtoCz9dIJQ

survivor
destiny's child
https://www.youtube.com/watch?v=Wmc8bQoL-J0

truly madly deeply
savage garden
https://www.youtube.com/watch?v=WQnAxOQxQIU

i love the way you love me
boyzone
https://www.youtube.com/watch?v=J65wrZv6Cg8

nobody
keith sweat
https://www.youtube.com/watch?v=FMar1ifzdmk

where do you go
no mercy
https://www.youtube.com/results?search_query=where+do+you+go+no+mercy

satan
orbital
https://www.youtube.com/watch?v=u-785O2rpTM

all by myself
celine dion
https://www.youtube.com/watch?v=NGrLb6W5YOM

hypnotize notorious
B I G
https://www.youtube.com/watch?v=glEiPXAYE-U


ப்போது இந்தப் பாடல்களின் மீது எனக்கு எந்த மயக்கமோ அதிர்வோ இல்லை.நான் ஏன் இத்தகைய பாடல்களைக் கோர்த்து ஒரு குறிப்பிட்ட மனம் மழுங்கிய காலத்தில் திரும்பத் திரும்ப அவற்றைக் கேட்டேன் என்ற கேள்விக்கு எங்கனம் பதிலில்லையோ அதே போலத் தான் அதன் பிற்பாடு என்னால் இந்தப் பாடல்களை எந்தக் குற்ற உணர்வும் இன்றிக் கைவிட்டு வெளியேற முடிந்தது எப்படி என்ற வினாவுக்கும் பதிலில்லை.ஒரு வேலையும் பாராமல் இந்த மனம் என்ற ஒன்றுடன் சதாசர்வகாலமும் பேசிக்கொண்டே இருந்துவிடலாம் என்ற ஒரு ஆசை அப்போது மட்டுமல்ல இப்போதும் வரும்.உடனே உள்ளே இருக்கும் இன்னொரு அவன் எச்சரிப்பான்.வேண்டாம்.பைத்தியம் என்பார்கள் என்று.மனம் என்பதன் இன்னொரு பெயர் நோய்மை.

றுபடி இயல்பான மன நிலைக்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆயின.அதுவும் நானே அறியாமல் மெல்ல மெல்லத் தான் இயல்பானேன்.அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தினமும் ஐந்து அல்லது ஆறு மணி நேரங்கள் குறிப்பிட்ட பாடல்களடங்கிய கேஸட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருப்பேன்.கையிலிருக்கும் புத்தகத்தை வாசித்தபடியே இருப்பேன்.இந்த இரண்டு செயல்களையும் ஒருங்கே செய்தது போலத் தோன்றினாலும் பாடல் என்பதை முழுவதுமாக உள் வாங்கிக் கொள்ளாமல் அதன் ஒரு பாதியை மட்டும் ஒரு உபகரணத்தைப் போல உபயோகித்திருக் கிறேன் என்று இப்போது என்னால் உணரமுடிகிறது.எந்த ஒரு பாடலையும் பலவற்றுள் ஒன்றாக அடிக்கடி கேட்டால் விளைகிற கேட்பு இன்பம் ஒரு சில பாடல்களை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்கும் போது நிச்சயமாக விளையாது என்பது உறுதி.மாறாக அதே அந்தப் பாடல்களை அடிக்கடி கேட்பதென்பது உளவியலுக்குள்ளே பழகிப் போன சப்தமாக ஆழ்மனதில் சில இசைப்பாடல்களை ஆக்கிக் கொள்கிற முயல்வு என்று புரிகிறது.

யமாக இருக்கையில் சில பொழுதுகளில் என்ன என்றே தெரியாமல் நம்மை இயல்பாகக் காட்டிக் கொள்வதற்காக எதையாவது உதட்டிலிருந்து பேசிக்கொண்டிருப்போம் அல்லவா..?அது சில கணங்களுக்கு மட்டுமே சாத்தியம்.ஆனால் அதே போல சில பாடல்களைத் திரும்பத் திரும்ப ஒலிக்க விடுவதன் மூலமாக வாழ்க்கையில் இருக்கவிரும்பாத தருணமொன்றின் நெடிய காலத்தைக் கடக்க முயன்றிருக்கிறேன்.அவ்வளவு தான்.பாடல்கள் வாழ்க.

கராதிகள் பலவிதம்.எனக்கு என்னவோ சிறுவயது முதலே அவற்றின் மீது ப்ரியம் அதிகம். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.என் வாழ்வின் முதல் அகராதி லிஃப்கோ டிக்சனரி.அதனை ஒரு புத்தகத்தைப் படிப்பது போலவே அடிக்கடி எடுத்து வைத்துப் படிப்பேன்.அதன் பின் அந்த லயிப்போ என்ன கல்யாணமோ அகராதி என்றாலே உதட்டை ஈரப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு ஆகிப் போனது.நிற்க.இன்றைக்கு அடியேனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விதவித்யாச அகராதிகள் இருக்கின்றன. பழமையான அகராதிகள் சிலவற்றை அடைந்த பொழுதுகளில் அழகிய ஐ லவ் யூ தரும் இன்பத்தை விட அதிகமான இன்பத்தை அடைந்திருக்கிறேன்.இன்றைக்குக் கிட்டுகிறவற்றுள் மதுரைப் பேரகராதி முக்கியமானது.பழையனவற்றுள் ஆனந்தவிகடன் 1940 களின் இறுதியில் தொகுத்த ஆனந்தவிகடன் அகராதி சாலச்சிறந்தது.இரண்டாயிரம் பக்கங்களுடன் செழுமையும் துல்லியமும் கலந்து ததும்பும் சொற்கடலும் பொருள்வானமும் போல அது.பல கலந்துகட்டிப் புஸ்தகங்களை எல்லாம் பதிப்பிக்கும் விகடன் பதிப்பகம் அவற்றோடு அந்தப் பழைய அகராதியை எடுத்து தூசி தட்டி மறுபதிப்புச் செய்தால் மொழி வளரும்.அமரர் வாசனும் பாலனும் வானிலிருந்து வாழ்த்துவார்கள்.செய்தால் சுகம்.

ஹென்றி ஃபாண்டா-பெக்கி ஆஷ்க்ராஃப்ட்-டான் அமேஷ்-ஜான் கீல்குட்-மெல்வின் டக்ளஸ்-ஜார்ஜ் பர்ன்ஸ்-ஜெசிக்கா டாண்டி...இந்தப் பெயர்களெல்லாம் யாருடையவை..?ஆஸ்கார் விருது பெற்றவர்களுடையவை.சொல்ல வைத்த சிறப்பு என்னவெனில் இத்தனை பேரும் ஆஸ்கார் வாங்கிய போது இவர்களின் வயது 75க்கு மேல்.இன்னும் வயசு இருக்கு என்று நம்மவர்கள் திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.

ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் முடிவு மறுபடியும் இரட்டை இலைக்கு வெற்றி.இந்த தேர்தல் என்றில்லை. ஒரு தேர்தலின் வெற்றி எனும் அலகு எந்த மொத்தத்தில் என்னவாக இயங்கப்போகிறது என்பதை ஒட்டியே நடுவாந்திரம் என சொல்லக் கூடிய சார்பற்றவர்களின் தேர்வு இருக்கும். உதாரணமாக எங்களூர் எம்.எல்.ஏ ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா..?இவர் ஜெயித்தால் எதன் பலன் என்னவாகும்..?என்ன மாறும்..?என்ன மாறாது..?இன்னும் ஒரு வருடமே விஞ்சி இருக்கும் இந்த ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் ஆளும் அதிமுக வை தேர்ந்து எடுப்பதைத் தவிர வேறு ஆப்ஷனே அங்கே இல்லை என்று தான் கருதுகிறேன்.ஸோ....அவர்கள் வென்றதில் ஆச்சர்யமில்லை.ஆனால் பாஜக பெற்ற மாபெரும் வாக்குகள் அவர்கள் டாக்குகளைக் குறைத்துக் கொள்ளச் செய்தால் எதிர்காலம் சிறக்கும்.

பெருமாள் முருகன் எழுதிய ""வழி"" என்னும் கவிதை சமீப வாசிப்பில் ஈர்த்தது.

ஊர்ந்து மரமேறி
முட்டை விழுங்கியதும்
பொத்தென விழுந்து
தரை சேர்கிறது
பாம்பு


வெள்ளி சனி புதன் ஞாயிறு தொகுப்பு.காலச்சுவடு வெளியீடு.

நினைத்தபோது
தொடரலாம்


ஆத்மார்த்தி
19.02.2015