புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நாட் ஓகே மிஸ்டர் மணி!

தியேட்டரில் ஒருவர் கத்துகிறார்.

"என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு..?"
அந்த யாரோ ஒருவரை செமத்தியாக அடித்து உதைத்து விடலாம் என்று தான் எனக்கும் ஆசை எழுந்தது.எப்பேர்ப்பட்ட டைரக்டர் நம்ம மணிசார்..?அதும் நாயகன் மௌனராகம் அக்னி நட்சத்திரம் என எத்தனை சகாப்தங்களை உருவாக்கியவர்..?தளபதியையும் ரோஜாவையும் சும்மா சொல்லிட முடியுமா..?எனக்கு ஆத்திரமா வந்தது.ஆனாலும் எப்போதும் என் குரு சொல்வார்.முதல்ல உன் எதிரியைப் பேசவிடு.அப்பால தேவைப்பட்டா நீ பேசிக்கலாம்.அப்டின்னு.

அந்தக் குரல் எழுப்பினது யாருன்னு இண்டர்வல்ல தான் தெரிஞ்சுது..நம்ம பாம்புக் குட்டி..முன்னொரு காலத்துல எனக்கு அசிஸ்டெண்டா இருந்த பய்யன் தான்.இப்ப சினிமா கலை இலக்கியத்தை எல்லாம் தனியா பார்த்துகிட்டு தனிக்கட்சி தொடங்கிட்டான்.நானும் அவனும் இப்படி எங்கயாச்சும் சந்திச்சுக்குறது தான்.முகத்துக்கு நேரா பார்த்ததுக்கு அப்புறம் அவனை அவாய்ட் பண்ண முடியலை. மிச்ச படத்தை நானும் அவனும் அடுத்தடுத்து ஸீட்ல உக்காந்து தான் பார்த்தோம்.படம் முடிஞ்சப்பறம் ஆளுக்கொரு டீ சாப்ட்ற நேரத்துல நம்ம பய்யன் என்ன பிரமாதமா விமர்சிச்சுற போறான் இந்தப் படத்தைன்னு லேசா கேட்டேன்..அதென்னடா பாம்புக்குட்டி அப்டி கத்திட்டே.?அப்டின்னு கேட்டேன்.என்னை குறுகுறுன்னு பார்த்தான்.

வேணாம் வாத்யாரே...நீ கொஞ்சம் பாலீசான ஆளு...நான் அப்டி இல்லை.விஷத்தை கக்குவேன்.எதுக்கு விடு..சூப்பரா இருந்திச்சி படம்னு ஓடப் பார்த்தான்..


வாடா...டேய்..சொல்றா தம்பிடா நீயின்னு பல நல்ல வார்த்தைகளை சொன்னப்புறம் ஆரம்பிச்சான் பாருங்க...

என்ன பிரச்சினை உங்களுக்கு..?

லிவிங் டுகெதர் என்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றிய படம் எடுக்க நினைத்திருக்கிறார் மணிசார்.அதென்னவோ நல்ல விஷயம் தான்.விவாதத்துக்கு உரிய பொருள் தான்.ஆனால் அதையா எடுத்திருக்கிறார்..?கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த ப்ரியமானவளே விஜய்க்கு பதிலா இதுல நித்யா மேனன்.சிம்ரனுக்கு பதுலா மம்முட்டிபய்யன், எஸ்பிபால சுப்ரமணியத்துக்கு பதிலா இதிலொரு பணக்கார அம்மா...அடடே...ஆமால்ல அப்டின்னு யோசிச்சேன்...
சரி விவேக்கு வையாபுரி இவங்களுக்கெல்லாம் பதிலா..?இதை யோசிச்சிட்டிருக்கும் போது பாம்புக் குட்டி சொல்றான்..அது நாம தான் தலைவா..

சரி..நாலு பேருக்கு நல்லதுன்னா எதுமே தப்பில்லை இது நம்ம மணிஜி கமல் மூலமா சொன்ன சேதி.இதையும் அப்பிடி பார்த்தோம்னா...நித்யாமேனன் மம்முட்டி பய்யன் ப்ரகாஷ்ராஜ் அப்பறம் அவரு மனைவியா வர்ற நடிகை...இந்த நாலு பேருக்கு மட்டுந்தான் இந்தப் படம் நல்லது.நம்ம எல்லாத்துக்கும் கெட்டதுன்னு மைண்ட்வாய்ஸ் வருது பாம்புக் குட்டி மேல.

டக்குன்னு ஒரு பாயிண்டை பிடிச்சேன்...அதென்னடா பாம்புக்குட்டி...அல்சைமரை வெச்சி ஒரு செமை பாத்திரத்தை பில்ட் அப் பண்ணிருக்காரே மணிரத்னம்.,.?இதுக்கென்ன ஸொல்றேன்னு கேக்குறேன்..பகபகன்னு சிரிச்சினே சொல்றான்...சும்மா அளக்காதே வாத்தியாரே....
அது என்ன புத்சா..?அப்டின்னு கேக்குறான்.மொழி படத்துல எம்.எஸ்.பாஸ்கர் வாழ்ந்திருப்பாரு... அந்தப் படத்துல அதெப்படி லைவ் கேரக்டர்...இதுல அடிக்கொருதரம் அந்தம்மா காணாம போயி திரும்ப கரெக்டா ஈரோவும் ஈரோயினும் கைல பிடிச்சி கூட்டியாந்திர்றாங்க...இதுல என்னா சொல்ல வர்றாரு....அந்தம்மா மட்டும் காணாமப் போறதும் கிடைக்காம தேடுறதும் எப்பேர்ப்பட்ட மேட்டர்..?அதை சும்மா கொலு பார்க்க வர்றவங்களுக்கு சுண்டல் கணக்காவா டீல் பண்றதுன்னு போட்டு தாக்கிட்டாங்குறேன்.

எனக்கு பேச்சே வர்லை...நா எவ்ளோ பெரிய ஆளு...இந்த பாம்புப் பய நேத்துவந்தவன்...என்னை எதுத்து பேசுறான்..அதும் கருத்து பேசுறான்னு உம்முன்னு இருந்தேன்.சடக்குன்னு சொல்றான்.. தலீவா...ஒரு விதத்துல யோசிச்சா அந்த நித்யாமேனன் அப்டியே மௌன ராகத்துல வர்ற ரேவதி மோகனை சும்மா நொய்யி நொய்யின்னு டார்ச்சர் பண்ணினே போயி கட்சீல லவ்வுறேன்னும்.என்ன ஒண்ணு...அவங்க ரெண்டு பேருக்கும் மொதல்ல கல்யாணம்.அப்பறம் டைவர்ஸூ...அப்பறம் லவ்வு...படம் முடிஞ்சப்புறம் தான் பலான பலானதெல்லாம் நடக்கும்.இதே கதைய சும்மா கல் தோசையைத் திருப்பிப் போட்ட கணக்கா...மொதல்ல மம்மட்டி பய்யனும் நித்யாவும் லிவிங் டுகெதர் ஆகி பலான பலானதெல்லாம் நடந்துறும்.அப்பால மெதுவா ரெண்டு பேருக்கும் லவ் வரும்.இடையில சரி..போதும்...நீ பாரீஸ்கு போ...நா அமெரிக்கா போறேன்...படம் பார்க்க வந்தவனெல்லாம் நாசமா போவட்டும்னு ஒரு டைவர்ஸ் வரா மேறி இருக்கும்.அப்பால மெதுவா கல்யாணம் நடக்கறதோட படம் முடியும்.அழுதுகினே ஆடியென்ஸ் எல்லாபேரும் கலைஞ்சு போவாங்க..அதே தான் தலீவான்றான்.
நான் திகைச்சு போறேன்..

கவுதம் மேனன் எடுத்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரெண்டு பாத்திரங்களோட ஈகோவுக்குள்ளே இயங்கும்.படம் முழுக்க வண்ணமயமா இருந்திச்சி.அதையே மறுக்கா நீ தானே பொன் வசந்தம்னு எடுத்தப்ப எல்லாம் மிஸ் ஆயிட்டிதுல்ல..அதே கதையா அலைபாயுதே படத்ல ஜீவன் இருந்திச்சி...இதுல டெட்லி ஃபீலிங்க் ஆய்டுதுன்றான் பாம்புக்குட்டி..நான் அசந்துட்டேன்.

இன்னும் ஒண்ணு சொன்னான் பாருங்க பாம்புக் குட்டி..புதுப்புது அர்த்தங்கள் படத்துக்கும் கண்மணிக்கும் இன்னா பெர்ஸா வித்யாஸம்ன்றே நீ..?கேட்குறான்...நான் அவனை எரிச்சுப் பொதைச்சிரலாம்னு பார்த்தேன்.

அவன் சொல்றான்..

புதுப்புது அர்த்தங்கள் மைனஸ் இளையராஜா மைனஸ் கீதா இஸ் ஈகோல் டு ஓக்கே கண்மணி..அதுல வர்ற பூர்ணம் சௌகார் கேரட்டர் கூட அப்டிகா இப்டிகா மாத்தி உல்டாவாகி தான் மிஸ்டர் அண்ட் மிசஸ் பிரகாஷ்ராஜா மாறியிருக்கு..கவனிச்சியான்றான்

ஸரிடா....ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக்குக்கு என்ன குறைச்சல்னு கேக்கறேன்.
எனக்கு அழுகையே வந்திருச்சி அவன் சொன்ன பதில் அதை எப்டி நா சொல்வேன்,,?


அவன் சொல்றான்..அதுக்கென்ன கொறைச்சல்..இந்தப் படத்துக்கே மீஸிக் தான் கொறைச்சல்...சத்தம் தாங்கலை."

சரி எடிட்டிங் கேமிரா அப்டின்னு ஆரம்பிக்கிறேன்.
அவன் என்னைப் பார்த்து அதெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்னு கேக்குறாப்ல வாயை மூடுங்குறான்.நான் அப்டியே சுருண்டுட்டேன்.

செம்மை பணக்கார பொண்ணா நித்யா மேனனைக் காட்டாம இதை ஒரு தமிழ்க்குடும்பத்தோட  மிடில் க்ளாஸ் பிரச்சினையா அணுகியிருந்தா என்ன மாதிரி படமா வந்திருக்கும்..?அப்டின்னு பாம்புக் குட்டி கேட்டான்.

ஹூம்...படமா வந்திருக்கும்னு பதில் சொன்னேன்.என்ன தான் சின்னப் பய்யனா இருந்தாலும்...கேட்ட கேள்வி கரெக்ட் இல்லியா..?

நாட் ஓகே மிஸ்டர் மணி.