புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மீளாநதி


1.ஒரு காதலை துண்டிப்பது மிகவும் எளிதானது.


கேட்கவொண்ணாத சொற்களைத்
துணைக்கழைத்துக் கொள்வது முதற்படி.
விடாமல் அழைக்கிற
அலைபேசித் திரையை
அவ்வப்பொழுது பார்த்தபடியே
அனைத்தையும்
தவறிய அழைப்புக்களாக்குவது இரண்டாம்படி.
"கடைசியாக ஒரு முறை சந்திக்கலாம்.
எல்லாம் சரியாகும்"
என்று வரும்
குறுஞ்செய்தியைப் படித்ததும் அழித்து
ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை
என்று சாதிக்கவேண்டியது அடுத்தபடி.
வேறு எண்ணிலிருந்து அழைக்கையில்
"இதென்ன சிறுமை..?.இனி என்னை அழைக்காதே"
என்று துண்டிக்கிறது மிக முக்கிய மூன்றாம்படி
அழைப்புவராமல்
அந்த எண்ணை முடக்கிக் கொள்வது சூட்சுமம்.
அதன் பின்னால் வரும்
குறுஞ்செய்திகள் அனைத்தையுமே
திறக்காமலே அழித்துக் கொள்வது சுலபமான நான்காம்படி.
வேண்டுமானால்
வேறொரு எண்ணுக்கு
மாறிக்கொள்வது வசதியான ஐந்தாம்படி.
மற்றபடி
சாலச்சுகம்.

2.
ஒரு காதலை மறப்பது மிகவும் கடினமானது


அதற்குரிய
ஒரே ஒரு வழி
ஒரு காதலை
முற்றிலுமாக மறப்பது மட்டுமே.


கல்கி இதழில் வெளியானது