புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல்

தீராக்கடல்

நான் ரசித்த கவிதைகள்

ன்பானவர்களே..
ரசனை என்னும் சொல்லே எத்தனை தித்திப்பானதாக இருக்கிறது.?கவிதை சார்ந்த என் ரசனை எந்தப்புள்ளியில் ஆரம்பித்தது என்று இப்போது சிந்தித்தால் மலைப்பாக இருக்கிறது.முதன் முதலில் ஒரு வார இதழில் ஏறக்குறைய சொர்க்கம் என்னும் தனது தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் ஆத்மாநாமின்


இந்தக்கவிதை
எங்கு எப்படி முடியும்
என்றெனக்குத் தெரியாது
முடியும் போது
இருக்கும் நான் (இருந்தால்)
ஆரம்பத்தில்
இருந்தவன் தானா..?


ன்ற கவிதையை சுட்டிக்காட்டி இருப்பார்.எனக்கு அந்தத் தொடரைத் தாண்டி அந்தக் கவிதையும் ஆத்மாநாம் என்னும் பெயரும் எனக்குள் வந்து அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டது.பின் நாட்களில் சிறுபத்திரிக்கைகளைத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.கல்யாண்ஜியும் விக்கிரமாதித்யனும் கலாப்ரியாவும் ஞானக் கூத்தனும் எனக்குள் தத்தமது கவிதைகளால் செய்த மாயம் சொற்கொண்டு விளக்கிட முடியாத ஆனந்த ஆரம்பம்.என்னளவில் கவிதை ரசனை என்பது கவிதைகளைப் பற்றிய பாலபாடம் அல்ல என்றாலும் கூட அது பாலபாடமாக இருந்துவிடக் கூடாது என்றும் யாராலும் நிர்ப்பந்திக்க இயலாது.எதையும் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்துத் தானே ஆகவேண்டும்..?தமிழ்ப் புதுக்கவிதை தனது முதலாவது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எத்தனை கவிஞர்கள் எத்தனை எத்தனை கவிதைகள் எது கவிதை எது அ கவிதை என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்களை நேர்த்திப் பார்க்க ஆயிரம் சங்கப்பலகைகள் வந்தவண்ணம் கலைந்த வண்ணம் இருந்தாலும் கூட என்னளவில் நான் என்னும் வாசகன் எனக்குக் கவிதை என்ற உவப்பைத் தந்து விடுகிற எவற்றையும் எல்லாவற்றையும் ஏன் என்ற ஒற்றை வினவுதலைத் தாண்டி உற்றுப் பார்க்க விழையும் முயல்வே இப்பதிதலின் நோக்கம்.இது தரப்பட்டியல் அல்ல என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இன்னொன்றையும் சொல்ல முடிகிறது.எதுவும் தரப்பட்டியலாக இருந்துவிட முடியாது.கவிதைக்கான சர்வாதிகாரம் யாரிடத்திலும் இல்லை.ஆக இது என்னளவிலான கவிதை ரசனையின் தொகுப்பு.தன்விருப்பப் பட்டியல். அவ்வளவே.ஆமென்.

தொடர்ந்து பேசலாம்
அன்போடு


ஆத்மார்த்தி
10.06.2015