புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தீராக்கடல் 1விதை என்பது வானோர் வரமா..? ஏழாம் விரலா..?கைக்குட்டையின் இருளிலிருந்து எடுத்துக் காட்டும் வெண்புறாவா..?குழந்தை உதிர்க்கும் மேதமைச் சொல்லின் பொருந்தாமையா..?பிரேதத்தின் நிச்சலனத்தின் மீதெழும் இலக்கற்ற பொறாமையா..?இன்னபிறவா.?எது கவிதை..?

விதைக்கென்று நிச்சயிக்கப் பட்ட இலக்கணம் என்றேதுமில்லை.காணக் கிடைக்கும் இலக்கணங்கள் ஒன்றினைப் பிற மறுதலித்துக் கொள்கின்றன.சொற்கூட்டங்கள் ஒரு போதும் கவிதையாகாது.கவிதைக்கென்று சொல்லப்படுகிற இலக்கணங்களில் எனக்கு மிகவும் ஏற்புடையதாகத் தோன்றுவது என இவற்றைச் சொல்வேன்.

"சொந்த மொழியில் எழுதப் படுவதும் வேறெந்த மொழியிலும் பெயர்க்கவியலாததும் கவிதை" என்பதாகும்.

ந்த இலக்கணத்தை ஒற்றை இலக்கணமாக ஏற்கவேண்டியதில்லை.போலவே முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதும் இல்லை.நம் சிந்தனா மொழியில் உருவாகும் கவிதை என்பது மொழியின் பிரயோகமான ஒற்றைச் செய்கை அன்று.மாறாகக் கவிதையை எழுதவிழைகிற மனம் அதன் நனவு நனவிலி ஆகிய உபகூறுகளை உட்கொண்டதாகவே ஒரு கவிதை எழுகிறது.இதன் அடிப்படையில் இன்னுமோர் மொழிக்குப் பெயர்க்க முயலுகையில் அதை முன்னர் எழுதிய நனவு மற்றும் நனவிலி கூட்டிய மனம் என்ற ஒன்று காணாமற் போவதற்கோ அல்லாது போனால் காத்திரமான நனவு மற்றும் மனம் ஆகியவற்றின் கூடுகையாகச் சிதைவதற்கோ வாய்ப்பிருக்கிறபடியால் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதென்பது முற்றிலும் அதனை முன்னரெழுதியவற்றின் அனுபவ நிகர்செய்கையாக நேர்வதற்கு வாய்ப்பில்லை.என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது மொழியின் நிச்சயிக்கப்பட்ட உள்ளீடுகளைத் தன்னுள் புகுத்தி நிகழ்த்த வாய்க்கிற உச்சமான செயல்பாடு என்பேன்.கவிதைகள் வாழ்க.


எனக்குப் பிடித்த கவிதைகள்

ரிநானின் களம் காலம் ஆட்டம் என்னும் தொகுதி புது எழுத்து வெளியீடாக வந்தது.அதன் ஒரு கவிதை

1 அதிகம் பயன்படுத்தப்பட்ட காலுறையென நாறும் ஒரு முத்தம்


அவர்கள் இருவரும் வாசலில் சந்தித்துக் கொள்வார்கள் அச்சமயம்
அவர்கள் ஒரு முத்தத்தை வடிவமைப்பார்கள் அது
அதிகம் பயன்படுத்தப்பட்ட காலுறையென நாறும் முத்தம்
அவன் எப்போதும் விறைப்பு நிலையிலிருக்கும் தனிமையை மூடிவைத்திருக்கிறான்
அவள் ஆழமான வெறுமையை புதைத்து வைத்திருக்கிறாள்.
எப்போதாவது அவர்கள் வெறுமையைத் தனிமை கொண்டு நிரப்புவார்கள்.
இப்பொழுது போல
மிருகக்காட்சி சாலையில் மதியவுணவிற்காக கூண்டைத் திறக்கும் கரங்கொண்டு
அவள் குழற்பின்னலை பிரிக்கிறான் நின்றகோலத்தில் அவன்
தன் மகனைப் பள்ளிக்குத் தயார்செய்யும் முகத்தோடு
கட்டில் விளிம்பில் அமர்ந்தபடி அவனுக்கு ஆணுறை அணிவிக்கிறாள் அவள்
அதோடு அமர்ந்து தானும் மதியவுணவை முடித்திருக்கலாமென அவன் எண்ணுகிறான்
சிகையைப் படியச் செய்தபடி அவள் முணுமுணுக்கிறாள்
இன்றும் சாப்பாட்டுக்கூடையை மறந்துவிடக் கூடாதென்று
இந்த இரவில்
சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேன் என நடிக்கின்றன
சில ஊமைகள் தலைகவிழ்ந்தபடி.


ரு சட்டையைத் தைப்பதற்கான துணியை அளவுக்கதிகமான செவ்வகத்திலிருந்து அளவுகளுக்கேற்ப வெட்டி வெட்டித் தைப்பது போலக் கவிதையை உண்டுபண்ணி விடமுடியும் என்று நம்புகிற கவிஞர்கள்? சிலபலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.அவர்கள் ஏதேனும் கனவின் இருளில் காணாமற் போகட்டும்.சபரிநாதனின் முதல் கவிதைத் தொகுப்பு களம் காலம் ஆட்டம்.இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னதாக எழுதப்பட்ட கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதை என்று இதனைக் கருதுகிறேன்.

மொழியின் பொதுமையில் செல்வாக்குப் பெற்ற சொற்களின் யதார்த்தத்தைப் பகடி செய்கிற கவிதைகளை அனாயாசமாக எழுத வருகிறது சபரிநாதனுக்கு.காதலற்ற இரண்டு பேரின் சந்திப்பை கூடுகையை முயக்கத்தின் முயல்வு தொடங்கி உச்சம் அடைந்து நீச்சம் வரைக்குமான காமத்தின் படிநிலைகளை  நிறங்களும் சாயங்களுமற்ற நிசமான காட்சிப்படுத்தலை ஒரு படப்பதிவுக்காரனைப் போல் வாசகனுக்கு ஏற்படுத்தித் தருகிறார்.சொற்களின் சூதாட்டத்தை மிகவும் பழகிய ஆட்டக்காரனைப் போல் ஆழ விழைகிறார் சபரி நாதன்.

ந்தக் கவிதையில் அவர் உபயோகப் படுத்தியிருக்கும் தனிமை மற்றும் வெறுமை ஆகிய இரண்டு சொற்களும் அவற்றின் ஆதிப்பொருளை இழந்துவிடாமலே இருப்பது சபரிநாதனின் மாயவித்தை எனலாம்.அன்பற்ற முயக்கத்தை இதுவரைக்குமான சொல்லாடல்களில் அதிகபட்சமாக மிருகங்களின் புணர்ச்சியுடனாவது அல்லாது போனால் அரவங்களின் புணர்ச்சியுடனாவது உருவகப்படுத்திப் பார்க்கும் வழமையிலிருந்து பெரிதும் விலகி மிக நேரடியான சொற்பிரயோகங்களின் துணையுடன் மனிதர்களையே முன்நிறுத்திப் பார்ப்பது அற்புதம்.

க் கவிதையின் இறுதி வரிகளை மட்டும் தனியே பெயர்த்துப் பாருங்கள்.

இந்த இரவில்
சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேன் என நடிக்கின்றன
சில ஊமைகள் தலைகவிழ்ந்தபடி.


கவிதைக்குள் கவிதையாக வாசிப்பவனை அல்லாடச் செய்கிற இந்த மூன்று வரிகள் சதா அதிர்ந்துகொண்டே இருக்கின்றன மனம் பிறழ்ந்த நாயின் நோய்மைக் கால இரைச்சல்களைப் போல்.

தொடரலாம்
அன்போடு


ஆத்மார்த்தி


11.06.2015Last Updated (Thursday, 11 June 2015 16:27)