புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

விடுதிகள் சூழ்ந்த தெரு

1
எந்த ஊரின்
எந்த விடுதியிலும்
எல்லா ஊர்களும்
தங்கவும் திரும்பவுமாய்


2
அவசரத்துக்கு
ஒரு அறை
ஒரு ஆணுறை
சாலச்சுகம்
பரஸ்பரம்
பேச்சென்ப
அபசுரம்

3
அவள் பெயர்
இன்னொருத்தி
அவன் பெயர்
இன்னுமொருவன்

4
அவனையும்
பின்னால் நிற்கும்
அவள் எங்கோ
பார்ப்பதையும்
வெறித்துக்கொண்டே
எடுத்து நீட்டுகிறான்
லாட்ஜூக்கு
அருகாமை
மருந்துக்கடைக்காரன்

5
தின்பொருள் கிட்டாதாவென
முனை உடைந்த
குப்பைத் தொட்டியைக்
கிளறும்போது கேரி-பையில்
பலவற்றிலொன்றாய் இருக்கிற
ஆணுறையைப் பற்றியிழுக்கையில்
முகம் வெடித்துச் சிதறுகிற
வீதி நாயெனக் காமம்.


Last Updated (Saturday, 03 October 2015 10:44)