புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஆண்டவன் கட்டளை


ண்

கட்ளை

ன்

 

வெகு நாட்களுக்குப் பிறகு கச்சிதமான இன்னுமோர் படம். காக்காமுட்டை இயக்குனர் மணிகண்டன் தமிழில் மறுக்க முடியாத ஒரு இயக்குனராக மாற அவரது முதல் மூன்று படங்கள் போதுமானதாக இருக்கின்றன.இனி தைரியமாக மணிகண்டன் படம் என்று எதிர்பார்த்து நுழைவதற்கான முன் நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்தி இருக்கிறது.காதலற்ற காதலைப் படம் நெடுக ஒரு சின்ன எதிர்பார்ப்பாகக் கூடப் படர விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது சுவை.எளிதான பலமான வசனங்களும் இயல்பான படமாக்கலும் நம்பகத்தின் உள்ளே வேறூன்றும் பாத்திரங்களுமாகப் படம் கவிதையாய் விரிகிறது.இரண்டு நாயகிகளும் நல்ல தேர்வென நிரூபிக்கிறார்கள்.வினோதினி யோகிபாபு ஜார்ஜ் என இதற்கு முன்பு சிறுவேடங்களில் வந்தவர்களுக்கு இப்படம் சர்க்கரையால் நெய்யப்பட்ட வினாத்தாள்.அள்ளுகிறார்கள்.நாசர் ஏ வெங்கடேஷ் மற்றும் பெயர் தெரியாத பலரும் அளவாக அழகாக நடித்திருக்கிறார்கள்.
இசையும் இன்னபிறவும் கச்சிதம்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி....தமிழின் தகர்க்க முடியாத நாயகன்..கண்களும் உடல்மொழியும் ஒவ்வொரு பாத்திரத்துக்கான மெனக்கெடலும் குரலும் என ஆள்கிறார்....அடிச்சி ஆடுங்க தலைவா.....