புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காற்று வெளியிடை

இது ஒரு ஏறோப்ளேன் டைவருக்கும் அலைபாயும் டாக்டருக்கும் இடையே மலரும் கிழக்கே போகும் ஏறோப்ளேன் எனும் காதல் காவியம்.சிவப்பேரர் கார்த்தி (சிவக்குமார குமாரர்)இந்திப் படங்களில் பெருவெற்றி அடையும் மொழுமொழு கான்கள் மொசக்குட்டி ரோஷன்கள் கபூர்கள் மற்றும் நம்ப ஊர் மாதவர் போல் உன்னை ஆக்கியே தீர்றேன் தம்ப்ரீ என்று மணிரத்னர் கார்த்தியின் மீசையை எடுத்து படத்தையும் எடுத்து விட்டுருக்கார்.நிச்சயமா மணிஸார் இதை இந்தியிலும் டப்பிங் செய்வார்.என் பயம் என்னவென்றால் கோபம் கொண்ட இந்திக்காரங்கியள் என்ன வேணா செய்யட்டும் தாங்கிக்கலாம் ஆனால் இதை மறுபடி தமிழில் டப் செய்யாட்டி போதும்.
.வளர்ந்து வரும் இளம் நடிகர் டெல்லி கணேஷ் பழம் பெரும் நடிகர் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவருக்கும் ரோல்களை மாற்றித் தந்திருப்பது மணிஸாரின் புத்திசாலிஸார்.
(அறிக டெல்லி போர்ஷனுக்கு டெல்லி கணேஷ்)
நான் ஏன் பிறந்தேன் எனக் கேட்கமுடியாத கதாபாத்திரக் கர்ணல் டெல்லிகணேஷை சாவச்சி சவப்பெட்டியில் திணிச்சி வரக்கூடிய ஸீன் ஆலிக்கட்டை ரேஞ்சுக்கான ட்விஸ்ட் எனலாம்.
பேசியே கொல்லும் கார்த்தி பயங்கர சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் ஈறோயினி இந்த ஈறோயினி வேறாரும் அல்ல.அவதார் படத்தில் வரும் எதிர்கால உயிரி ஈரோயினியை கிராஃபிக்ஸ் செய்து நிகழ்காலத்தில் கண்டறியப் பட்ட அவதார்நங்கை என்பதால் காற்று வெளியிடை அவதாருக்கு சாலஞ்சு செய்து எடுக்கப் பட்ட குறைந்த செலவு மணிஸார் அவதார் படம் என்பதையும் கருத்தில் நிறைக்க.
இந்திய விமானப் படை ப்ரைவைடைஸேஷன் ஆனதாக கற்பனை செய்திருக்கும் மணி ஸாரை எப்படி வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பாராட்டிப் பாராட்டலாம்.ஏன் என்றால் சில பல டாக்டர்கள் கொரியர் பாய்ஸ் வேன் டிரைவர்கள் இன்ன பிற இன்னொஸெண்டுகள் இந்திய பிரஜைகள் பலரும் சர்வ சகஜ சன்மார்க்கமாக இந்திய விமானப் படை தளம் ஆபீஸ் பிற கட்டுப்பாடுகளைக் கொண்ட இடங்களுக்குச் சென்று வருவதும் காதோள் செய்வதும் புதுமையிலும் புதுமய்.
என்ன தான் ஆச்சு இந்த ஊருக்கு என்று தொடங்கும் சிகரட்டு நிறுத்த விளம்பரம் வருகிற அதே டோனில் என்னதான் ஆச்சு மணி ஸாருக்கு என்று தலையைத் தட்டிக் கொண்டே வெளியே போய் விட்டுத் திரும்புவதற்கு இடைவேளை உதவுகிறது.அதற்கு முன்னும் பின்னுமாக ஏகப்பட்ட எக்கச்சக்க ட்விஸ்டுகள் கார்த்தியின் ஆணாதிக்கம் திமிர் பெண் அடிமைத் தனம் ஆகியவற்றை விலாவாரியாகக் காட்டியபடியே அதை எல்லாவற்றையும் அவதார்நங்கை கண்டித்து பெண் சுதந்திரம் பற்றி விளக்குதல் இரண்டு பேரின் காதல் தியாகம் காத்திருத்தல் நீ போயிடு நா மாட்டேன் நீ போயிடு நானும் போறேன் நானும் நீயும் போய்டலாம் எல்லாருமே வாங்க ஓடிடலாம் என்பன போன்ற சுவாரஸியமான வஜனங்களுடன் படம் பார்க்க வந்திருக்கிற ஒவ்வொருத்தனையும் கொல்லாம விடாத என்ற சூளுரையுடன் கூடிய பல கதைகள் இந்தப் படத்தில் உண்டு.
பாகிஸ்தான் சிறைச்சுவரை சோத்துக்கையாலேயே சுரண்டு சீனி வெடி வெடித்து தப்பித்து மினி பஸ் ஒன்றைப் பிடித்து ஆப்கானிஸ்தான் வழியாக டெல்லிக்கு வந்து சேரும் இரத்தத்தை உறைய வைக்கும் இராணுவக்கதைகளும் இதே படத்தில் உண்டு என்பதையும் அறிக.
மேலும் கார்த்தி அவதார்நங்கை சீரியஸாக லவ்வும்போதெல்லாம் கிண்டலடிப்பதைப் போலத் தோற்றமளித்திருப்பது மணி ஸாரின் பின் நவீனத்துவ உத்தி.படம் முழுவதுமே அவர் நம் எல்லாரையும் அதே பின் நவீன உத்திப்படி கிண்டலடிக்கவே எடுத்திருக்கிறார் என்ற ஐயம் எழாமல் இல்லை.
மேலும் மேலும்
இந்தப் படத்தில் இடையிடையே பழம்பெரும் மூத்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் வருவது இரண்டு தரப்பாருக்குமே ஆறுதல்களை அளிக்கின்றன.(டிஸ்கி எந்த இரண்டு தரப்பாருக்கும் இது பொருந்தும் என்பதை உணர்க)மேலும் கார்த்தி ஈரோயின் அவதார்நங்கை இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை மற்றும் காதலர்கள் ஒன்று சேரும் போது நின்ற இடத்தில் கண்ணீர் உகுக்கிறவங்கியள் நல்ல ரசிகங்கியள்.மாறாக விட்டால் போதும் என ஓடத் தொடங்குபவர்கள் தியேட்டருக்குள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட மோட்டார் வாகனச்சட்டத்தின் படி தண்டனைக்கு உரியவர்கள்.
ஆயுத எழுத்து ராவணன் ஓகே கண்மணி போன்ற மணி ஸாரின் பழைய புனஸ்காரங்களின் போதும் நீங்கள் இப்படித் தான் சொன்னீங்கள்.உங்களுக்கு அவர் மீது காண்டு எனப் புறப்படுறவங்கியளுக்கு...
தம்பிஸ்...ஒரு படத்துக்குத் தான் இது காண்டு..ஒவ்வொரு படமாத் தொடரும் போது அது ரைவல்ரி...
மணிஸாருக்கு சிரித்த முகத்தோடு ஓரு ஸ்மைலி அனுப்பத் தான் ஆசை.கெரகம் அதுங்கூட மணிஸார் நம்மளைப் பார்த்து நக்கலா சிரிக்காப்ல தோணுதி....
மணிச்சார்..ஐ லவ் யூ ச்சார்...