புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாசிக்க சில புத்தகங்கள்

சிங்கப்பூரில் வசிக்கிற தமிழார்வம் மிக்கவர்களை ஒருங்கிணைத்து ஸ்கைப்பில் அவர்களோடு தமிழ்நாட்டின் எழுத்தாளர்களை உரையாடச் செய்கிற முயல்வை தங்கமீன் இலக்கிய வட்டம் சார்பாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எதிர்பாராத வினாக்களைப் பலரும் வினவினார்கள்.தேடலென்பது தீராத தாகத்தைத் தான் உண்டு பண்ணும்.தமிழ்க் கவிதைகள் குறித்த பல வினாக்களுக்கு பதிலளித்தேன்.நடுவே ஒருவர் கவிதை எழுத விரும்புகிறேன்.எழுத்தார்வத்தின் துவக்கத்தில் இருக்கும் கவிசொல்லிகளுக்கு என்னென்ன புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று பட்டியல் ஒன்றைத் தர முடியுமா எனக் கேட்டபோது இதற்கான பட்டியலை என் இணைய தளத்தில் எழுதி வெளியிடுகிறேன் என்றவாறு அடுத்த கேள்விக்கு நகர்ந்தேன்.

இந்தப் புத்தகங்கள் கொண்ட பட்டியல் என்பது என் ரகசியத்திலிருந்து நான் தயாரித்துத் தருவது.முழுமையான பட்டியலென்றோ தரவரிசைப் பட்டியல் என்றோ இதனைக் கொள்ளவேண்டாம்.முடிந்தவரை என்ன பதிப்பகம் என்ற விபரத்தையும் குறிப்பிடுகிறேன்.இவற்றை எல்லாம் வாசிப்பதென்பது கவிதையை மாத்திரமல்லாது எழுத்துத் திறனைக் கூர்செய்யும்.பார்வை தெளிவாகும்.மனசு நடுக்கம் குறையும் நம்மை உட்கொண்டபடி மொழி நடத்திப் பார்க்கிற ஜாலவித்தை தானே கவிதை..ஒவ்வொரு நகர்வின் போதும் என்ன நடக்கிறது என்பதை நம்மைக் கொண்டே அளந்து அடுத்தடுத்த சொற்களை நோக்கிச் செல்ல முடியும்.இந்த நூல்களில் மொழிவளத்துக்கானவை கவிதை பற்றிய புரிதலுக்கானவை மற்றும் கவிதையியல் சார்ந்த நூல்கள் இவற்றைத் தாண்டிக் கவிதை நூல்கள் மீது வரையப்பட்ட விமர்சன உரைகள் என்று என் புத்தக அலமாரியிலிருந்து ஒரு தனித்த பட்டியலைத் தயாரித்துத் தந்திருக்கிறேன்.இவற்றை வாசித்தல் இனிது.இவற்றுக்கு அப்பால் எழுதுதலும் இனிது.வாழ்தல் இனிது

சந்திக்கலாம்
அன்போடு
ஆத்மார்த்தி

1 புதுக்கவிதையில் குறியீடு அப்துல்ரகுமான் அன்னம்
2 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் அகரம்
3 புதுக்கவிதை மொழி முனைவர் மா,கோவிந்தராசு பாவை பதிப்பகம்
4 நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் உயிர்மை
5 கவிதை நேரங்கள் சிற்பி பாலசுப்ரமணியம் கவிதா பப்ளிகேஷன்
6 இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் நா.வானமாமலை பல்கலைப் பதிப்பகம்
7 கவிதை என்னும் வாள்வீச்சு ஆனந்த் காலச்சுவடு
8 காற்றை அழைத்துச் செல்லும் இலைகள் க.அம்சப்ரியா அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
9 கவிதையிலிருந்து மெய்யியலுக்கு ஞானி ஆரூத் புக்ஸ்
10 கதவு அருகே சொற்கள் பாலா அகரம்
11 சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும் வெ.மு.பொதியவெற்பன் வம்சி புக்ஸ்
12 கல்லும் முள்ளும் கவிதைகளும் கோவை ஞானி புதுப்புனல்
13 புதுக்கவிதைகளில் உளவியல் சிந்தனை மித்ரா
14 தீராக்கடல் ஆத்மார்த்தி வதனம்
15 கவிதைக்காக ஞானக்கூத்தன் விருட்சம் பதிப்பகம்
16 சப்தரேகை ராணிதிலக் அனன்யா
17 தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை அன்பாதவன் மருதா
18 எழுத்தும் கவிதையும் முனைவர் சுபாசு சிந்தியன் பதிப்பகம்
19 கோட்பாட்டு விமர்சன யுகம் விமர்சனக் கோட்பாட்டு யுகம் நோயல் ஜோசப் இருதயராஜ் அடையாளம்
20 தமிழில் நவீனத்துவம் பிரமிள் நற்றிணை
21 இலக்கியத் திறனாய்வு இசங்கள் கொள்கைகள் அரங்க சுப்பையா பாவை பதிப்பகம்
22 இலக்கிய இயக்கங்களும் இலக்கியக் கொள்கைகளும் முனைவர் உ.கருப்பத் தேவன் மீனாட்சி பதிப்பகம்
23 பின் காலனீயம் மிகச்சுருக்கமான அறிமுகம் ராபர்ட் ஜேசி யங் அடையாளம்
24 இலக்கிய இஸங்கள் இ.எஸ்.தேவசிகாமணி அகரம் வெளியீடு
25 படைப்புக்கலை முனை.மு.சுதந்திரமுத்து அறிவுப்பதிப்பகம்
26 தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகள் பாலா அன்னம்
27 பின் நவீனத்துவம் மட்ஸ் அல்வெஸன் தமிழில் வான்முகிலன் அலைகள்
28 நவீன உலக்கியம் அடையாளம் அழகியல் இரா.காமராசு பாவை பதிப்பகம்
29 மாயையும் எதார்த்தமும் டிடி கோசாம்பி அலைகள்
30 பின் நவீனத்துவம் தொகுப்பு ஆர்.ரவிச்சந்திரன் புதுப்புனல்
31 நிலவொளி எனும் இரகசிய துணை எம்.டி.முத்துக்குமாரசாமி அடையாளம்
32 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
33 நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்
34 ஜப்பானிய தமிழ் ஹைகூ கவிதைகள் பரிமளம் சுந்தர்
35 கல்தெப்பம் எஸ்.வி.ராஜதுரை
36 தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு கா.சாகுல் ஹமீது NCBH
37 புதிய போக்குகளின் தோற்றம் வளர்ச்சி து.சீனிச்சாமி சந்தியா பதிப்பகம்
38 வால்ட் விட்மன் சதுரகிரிப்பாண்டியன் அறிவரங்கம்
39 புதுக்கவிதையும் புதிய கவிதையும் கவிஞர் பொன்மணி
40 அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை வெங்கட் சுவாமிநாதன் அகரம்
41 மொழிபெயர்ப்பியல் சீ.சீவசண்முகம் வே.தயாளன் அகரம்
42 இலக்கியத்தில் தொல்படிமங்கள் நார்த்ராட் ஃப்ரை தமிழில் க,பஞ்சாங்கம் அன்னம்
43 எழுபதுகளில் கலை இலக்கியம் இலக்கு கட்டுரைகள் காவ்யா
44 இடைக்காலத் தமிழ் சாத்தூர் சேகரன்
45 சொல் பொருள் அறிவோம் கா.வி.ஸ்ரீனிவாசமூர்த்தி சந்தியா பதிப்பகம்
46 வளரும் தமிழ் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன்
47 தமிழ்க்கவி சரிதம் ஸ்ரீ ராகவையங்கார்
48 மொழியும் இலக்கியமும் எம்.ஏ.நுஃமான் அடையாளம்
49 தமிழ் இலக்கணம் ஒரு எளிய அறிமுகம் கோ.குமரன் சந்தியா


விக்கிரமாதித்யன்
*************************
50 எல்லாச் சொல்லும் நிவேதிதா பதிப்பகம்
51 கங்கோத்ரி கயல்கவின்
52 மாயம் செய்யும் கவிதை நக்கீரன்


இந்திரன்
************
53 தோட்டத்து மேசையில் பறவைகள்
54 அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்
55 கவிதையின் அரசியல் அலைகள் வெளியீடு
56 இந்திரன் காலம் ஒரு இலக்கிய சாட்சியம் ஆழி பதிப்பகம்


ந.முருகேசபாண்டியன்
*******************************
57 சொற்கள் ஒளிரும் உலகம் வம்சி புக்ஸ்
58 என் பார்வையில் படைப்பிலக்கியம்
59 எங்கே செல்கிறது தமிழ்க்கவிதை உயிர்மை


தமிழவன்
**************
60 அமைப்பியலும் அதன் பிறகும் அடையாளம்
61 தமிழுணர்வின் வரைபடம் உயிர்மை


சுகுமாரன்
***************
62 இழந்த பின்னும் இருக்கும் உலகம் உயிர்மை
63 திசைகளும் தடங்களும்  அன்னம்
64 பெண் வழிகள் காலச்சுவடு


க.பூர்ணச்சந்திரன்
************************
65 கவிதையியல் வாசிப்பும் விமர்சனமும் அடையாளம்
66 நில அமைப்பும் தமிழ்க்கவிதையும் தனிநாயக அடிகள்  NCBH


பிரம்மராஜன்
*******************
67 இலையுதிராக் காடு எதிர்
68 வார்த்தையின் ரஸவாதம் உயிர்மை


எம்ஜி.சுரேஷ்
******************
69 படைப்பும் பன்மையும் புதுப்புனல்
70 இஸங்கள் ஆயிரம் மருதா பதிப்பகம்
71 அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே புத்தக அங்காடி
72 எம்ஜிசுரேஷ் கட்டுரைகள் புதுப்புனல்
73 பின் நவீனத்துவம் என்றால் என்ன அடையாளம் பதிப்பகம்
74 சொற்களைத் தவிர வேறில்லை புதுப்புனல்


திசு.நடராசன்  
******************
75 கவிதையெனும் மொழி  NCBH
76 எழுதும் கலை அலெக்சி டால்ஸ்டாய் NCBH
77 கவிதை இயற்றுவது எப்படி மாயகாவ்ஸ்கி NCBH
78 கலையும் மொழியும் கான்ஸ்டாண்டின் ஃபெடின் NCBH
79 தமிழ் அழகியல் காலச்சுவடு


சுஜாதா
************
80 நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்
81 ஹைகூ ஒரு புதிய அறிமுகம்


லதா ராமகிருஷ்ணன்
*********************************
82 வரிகளின் கருணை சந்தியா பதிப்பகம்
83 மொழிபெயர்ப்பின் சவால்கள் லதா ராமகிருஷ்ணன் டாக்டர் ஜி.ஜெயராமன்அ.கி.பரந்தாமனார்
*************************
84 கவிஞராக  அல்லி நிலையம்
85 நல்ல தமிழ் எழுத வேண்டுமா  பாரி நிலையம்

Last Updated (Monday, 15 May 2017 10:34)