புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மரகதநாணயம்

மரகதநாணயம்

 

புதிய இயக்குநர் ஏ.ஆர்கே சரவண் எடுத்திருக்கும் முதல் படம்.சமீப காலத்தில் வழுக்கிக் கொண்டு செல்லக் கூடிய இத்தனை நேர்த்தியான திரைக்கதையுடனும் படமாக்கலுடனும் பங்களிப்புடனும் ஒரு படத்தைப் பார்க்கவில்லை.சபாஷ்.வழக்கமான படங்களின் அறியப்பட்ட காட்சிகள் பின்னணி அவற்றின் நம்பகம் கலந்த எதிர்பார்த்தல் ஆகியவற்றை உடைப்பதைக் கொண்டே ஒரு அருமையான திரைக்கதையைப் படைத்து விட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.பேய்ப்படங்களின் காலத்தில் இந்தப் படத்துக்கு முன் பின்னாய்ப் பேய்ப்படங்கள் இரண்டாய் வகுபடும் என்ற அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும்.மேலும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிய காரணம் கதாபாத்திரங்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.நடிகர்கள் தெரிவதே இல்லை.
ஆதி ஆனந்த்ராஜ் மீம் கோபி நிக்கி கல்ரானி எல்லாவற்றுக்கும் மேலாக ராம்தாஸ்.இந்தப் படத்தின் முடிவில் அத்தனை நடிகர்களையும் நேசித்தவண்ணம் வெளியேறுவோம் என்பது இதன் பெரிய வெற்றி.பாடல்கள் இல்லை.புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்துவது போல அட்டகாசமான பின்னணி இசை உறுத்தாத ஒளிப்பதிவு என வழமையின் கொத்துக்கறிகளிலிருந்து வெகுதூரம் விலகி இந்தப் படம் நெடு நாட்களுக்குப் பின்னால் ஒரு முழுமையான எண்டர்டெய்னர்.

நகைச்சுவை ரொம்பக் கஷ்டம் சாமிகளா..அதை இத்தனை வெரைட்டியாகத் தருபவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய சொற்கள் இவை தான்.

சபாஷ் சூப்பர் தொடருக.