புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தனிமையான சிறுவன் steve wonder

லுலாவுக்கும் கால்வினுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த ஸ்டீவ் பிறப்பதற்குக் குறித்த தினத்துக்கு ஆறு வாரங்கள் முந்திப் பிறந்த குழந்தை.அதனால் ஏற்பட்ட குறைபாடாக ஸ்டீவ் வொண்டருக்குக் கண்பார்வை கிடையாது.ஸ்டீவ் ஒரு குழந்தை மேதை என்பதிலிருந்து அவரது கதை துவங்குகிறது.பாடல்களை உருவாக்குவதில் ஸ்டீவ் தனித்தன்மை வாய்ந்தவர்.அவரொரு பாடகர் தனக்கான பாடல்களைத் தானே எழுதிப் பாடி அவற்றைச் செதுக்குகிற வல்லமை ஸ்டீவினுடையது.இவற்றோடு கூடுதலாய் ஒரு தகவல் ஸ்டீவ் ஒரு பல்வகை வாத்திய மேதை.
தனிமையான சிறுவன் (lonely boy) என்ற தனது முதல் ஆல்பத்தை உருவாக்கும் போது ஸ்டீவ் வொண்டரின் வயது வெறும் 11.கடந்த ஐந்து தசாப்தங்களில் உலகின் செவ்விசை எத்தனையோ மாற்றங்களை உள்ளெடுத்தபடி நில்லாமழையாக எப்போதும் தூறும் இசைவானமாகத் தன்னை நிரந்தரித்துக் கொண்டதற்குத் தனித்த காரணங்கள் இல்லாமல் இல்லை.அவரது மன உறுதி முன்னேற வேண்டும் என்கிற வெறி என்பதெல்லாம் எல்லா வெற்றிக்கதைகளிலும் தாராளமாகச் செருகப் படுகிற உபகாரணிகள் தான்.ஸ்டீவ் வொண்டருடைய வெற்றிக்குக் காரணம் அவர் தனது பார்வையின்மையை ஒப்புக்கொள்ளவில்லை.பார்த்தல் என்பது விழிகளின் வாயிலாகக் கிடைக்கிற காட்சி அனுபவம்.அவர் அதனையே தன் அகத்தினால் இசைக்கோர்வைகளின் வாயிலாகவும் அடைய முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டார்.
ஸ்டீவ் பாடல்களை எழுதுவதில் அற்புதத் திறன் வாய்ந்தவர்.இருபத்தி ஐந்து கிராமி விருதுகளைப் பெற்றிருக்கும் ஸ்டீவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் 1996 ஆமாண்டு வழங்கப்பட்டது.இந்த உலகம் இதுகாறும் எத்தனையோ இசைக்கலைஞர்களை மேதைகளைச் சந்தித்திருக்கிறது.வெகு சில மேதைகளின் பெயர்கள் அவர்களது
ஒரு மனிதன் தன் ஆன்மாவிலிருந்து நேரடியாகப் புரியக் கூடிய செயல் ஏதும் இருக்க முடியுமா..?ஸ்டீவ் வொண்டரைப் பற்றி அறிந்தவர்கள் ஆன்மாவிலிருந்து எழுவதே இசை என்று ஒப்புக் கொள்வார்கள் .
இருபத்தி ஐந்து கிராமி அவார்டுகள்.1996இல் வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதும் வழங்கப்பட்டது.ஆஸ்கார் விருதையும் பெற்றவர்.ஐந்து தசாப்தங்களாக செவ்விசை உலகில் குன்றா ஒளியுடனான பெயர்களில் ஸ்டீவ் வொண்டர் என்பதும் ஒன்று.ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த ஸ்டீவ் பிறப்பிற்காகக் குறித்த நாளுக்கு ஆறுவாரங்கள் முன்பே பிறந்த குழந்தை.உயிரைக் காப்பாற்றவே போராட வேண்டி இருந்தது.உயிர் பிழைத்தாலும் கண்பார்வை இல்லாமற் போனது.இதனை ஒரு முடிவாகவோ முடக்கமாகவோ எடுத்துக் கொள்ளாமல் தன் வாழ்வினை முழுவதுமாய் செதுக்கிக் கொண்டார் ஸ்டீவ்.
1950ஆமாண்டு பிறந்த ஸ்டீவ் ஒரு கறுப்பின இசைக்கலைஞர். அவரொரு மழலை மேதை.பதினோரு வயதிலேயே ஒரு ஆல்பத்தை உருவாக்க முடிந்தது.பன்னிரெண்டு வயதில் தொடங்கிய இசைப்பயணம் இன்றைக்கு வரை அமெரிக்க இசை உலகில் அவருக்கான தனி இடத்தை நிரந்தரித்துத் தொடர்கிறது.
ஸ்டீவ் பன்முகத் தன்மை வாய்ந்தவர்.அவரால் பல்வேறு வாத்தியங்களை வாசிக்க முடியும்.தனக்கான இசைக்கோர்வைகளைத் தானே எழுதி இசை அமைத்துப் பாடல் எழுதி பாடி முடிக்கும் வல்லவர் ஸ்டீவ்.70களில் தொடங்கிய புகழேந்தலுக்கு இவை யாவும் காரணமாயிருக்கக் கூடும்.
ஸ்டீவ் பற்பல சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவர்.வாழ்நாளில் பெரும்பான்மை தினங்களைப் பயணங்களில் கழித்தவர்.எத்தனையோ நாடுகளின் மேடைகளைத் தனது அற்புதமான இசையால் மலர்த்தியவர்.1973ஆமாண்டு மாபெரும் விபத்தொன்றில் சிக்கி நாலைந்து தினங்கள் நனவிலி நிலையில் இருந்து மீண்டவர்.இரண்டு திருமணங்கள் விவாகரத்து சக பாடகர் ஒருவரைப் பற்றி ஸ்டீவ் உதிர்த்த கருத்தைத் திரும்பப் பெறச் சொல்லி எழுந்த பெரிய சச்சரவு என்று இசைவாழ்வின் சகல தருணங்களிலும் ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருபவர்.என்றாலும் ஸ்டீவின் மனது இசை இசை என்றே இயங்கவல்லது என்பதை அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள்.தனிமையை ஏகாந்தத்தை விடுபடுதலை இசைமயமாக்கியவர்களில் ஸ்டீவுக்கு முக்கிய இடம் உண்டு என்று இசை விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஸ்டீவின் வார்த்தைகள் ரசவாதம் புரிபவை.அவரது பாடல்களின் துவக்கங்களையும் தலைப்புகளையும் பார்த்தால் இது புரியவரும்.என் ஆன்மாவின் இசை1972 அவளைக் காதலிப்பதற்காக உருவாக்கப்பட்டேன் 1967 என்வாழ்வில் ஒருமுறை நிகழ்வதற்காக 1968 கையொப்பமிடப்பட்டது:சீல் இடப்பட்டது மற்றும் கையளிக்கப்பட்டது 1970 பேசும் புத்தகம் 1972 வனக்காய்ச்சல் 1991 இவையெல்லாம் சாம்பிள்கள்.
அவருடைய சமீபத்திய புகழ்பெற்ற ஆல்பமான A TIME TO LOVEஇல் அடங்கிய shelter in the rain பாடலின் பல்லவி நிறைவடைகிறது இப்படி..
"எப்போது வானத்தில் மேலதிக அற்புதங்கள் நிகழவில்லையோ அந்த மழைக்கு நானுன் கூரையாவேன்.உன் வலிகளினூடாக ஆறுதலாவேன்."
ஸ்டீவ் வொண்டர் என்பது மேலும் ஒரு இசைக்கலைஞரின் பெயர் அல்ல.இசையினூடான ஒரு வாழ்வு.

(தினமலர் பட்டம் இதழில் வெளியான கட்டுரை)