புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஆதிவனமழை–1

நிறங்களின் தாற்காலிகத்தில் பெய்தமழை


ஒற்றையுயிரிகள்
உயிர்க்கனம் தேக்கிட
எறும்புகளின் விழிகளில்
பெருவெள்ளமாய் சிறுதுளிகள் சிதறுகின்றன
மண்புழுக்களின் பாதை
முன்னும் பின்னும்
சிதைந்து தொங்குகிறது.
வளை கிழிந்த நண்டுகளின்
சாபவொலிகள்
நீர்மத்தின் பேரோசையில் பிசிறுகின்றன
உறக்கப் பாம்புகள் சகதியில் நெளிகையில்
கீழ்த்தளப் பறவையினங்களின் சிறகுகள்
கனத்துப் படபடத்து அடிக்கையில்
அதற்குள் இன்னொன்றாய்ப்
புதுமழை மண்ணிற்படச்
சேர்மானங்களில் பிறக்கிற
நிறங்களின் தாற்காலிகத்தை
வியந்தபடியே
கலைடாஸ்கோப்பை
இன்னொருமுறை
உருட்டத் தலைப்படுகிறான்
கிழப்பேரரசன்.