புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்

முதல் பதிப்பு:  ஜுன், 2011

பதிப்பகம் : உயிர் எழுத்து பதிப்பகம்

ஆத்மார்த்தியின் கவிதை மொழி நுட்பமானது, இலகுவானது, சிக்கலற்றது. அதேவேளையில் நவ வாழ்வின் சிக்கல்களைப் பேசுவதாகவும் இவை விளங்குகின்றன. காதல், காமம், குரூரம், வக்ரம் என எவ்வித மனத்தடைகளுமற்று கடந்து செல்கின்றன இவரது கவிதைகள், இது நம் வாழும் காலம் நம் இளம் கவிஞர்களுக்கு வழங்கியிருக்கும்  பாடுபொருள். மிகவும் அந்தரங்கமானவற்றையும் கவிதைகளில் இறக்கிவைக்கப்படும் போது அவ்வந்தரங்கம் தனி மனித அந்தரங்கமாகத் தேங்காமல் சமூக அந்தரங்கமாக, ஆய்வுக்குரியதாக மாறுகிறது.

- கரிகாலன்.

நான் கடந்து வந்த கவிதைகளை எழுதிய அத்தனை கவிஞர்களுமே என்னை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கூற்று எந்த அளவு உண்மையோ அதே அளவு இதன் வெளிக் கூற்றும் உண்மையே. என்னை எந்தக் கவிஞருமே பாதிக்கவில்லை. நான் சந்தோஷமானவன். என் கவிதைகள் மெல்லிய சோகத்தை, ஊடலை, வெளியேற்றத்தை, பிரிவுக் கணமொன்றின் அவமானத்தை, வலியை, ஒளிந்துகொண்டு திரியும் தனிமையை, இன்னும் இன்னும் எழுத வேண்டியிருக்கிற வதங்கலை மௌனமாக எடுத்து வைக்கக் கூடியவையாக இருப்பது திட்டமிட்டதே.

- ஆத்மார்த்தி