புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

முகங்கள் 1எம் பி உதயசூர்யனை எனக்கு அமுதா தமிழின் சுவரில் நான் என்ன எழுதினாலும் அதன் கீழ் இவருடைய கமெண்டுக்கள் இருக்கும்.அப்படி தான் அறிமுகம்.உதயசூர்யனிடம் எனது எழுத்துக்களை ஆன்லைனில் அறிமுகம் செய்து வைத்த புண்ணியமும் அமுதாவுக்குத் தான் உண்டு.அவர் புதிய தலைமுறையில் பணி புரிவது உள்ளிட்ட எந்த தகவலும் அப்போது எனக்குத் தெரியாது.பிறகொரு நாள் தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம்.அன்று தொடங்கிய ஒரு மழை என்றென்றும் பொழிகிறது மனங்களில்.

என் கல்லூரிக்காலங்களில் ஜூனியர் விகடனில் பரபர என்று கட்டுரைகளின்கீழ் இருக்கிற பெயர்கள் நன்றாக நினைவிருக்கும்.ஒரு கட்டுரையில் எழுதுகிற ஒருவன் எழுத்தாளனாகத் தெரிய வாய்ப்புக் குறைவு.ஆனால் ஒரு கட்டுரையாளன் மிக அமைதியாக அதனைப் பதிவான் என்பதே நிஜம்.எங்கள் மதுரைக்காரர்கள் என்பதால் சௌபா மற்றும் குள.சண்முகசுந்தரம் போன்ற பெயர்கள் தொடர்வாசகர்களுக்கு நன்றாக அறிமுக மானவை.அந்த வகையில் எம்.பி.உதயசூரியன் என்ற பேரும் பழைய நினைவுகளை நிரடினால் கிடைக்கக் கூடிய பெயர் தான்.அதற்கப்புறம் அவர் சில குழுமங்களைத் தாண்டி தற்போது புதிய தலைமுறை இதழின் துணை ஆசிரியர்களில் ஒருவராக இருப்பது ஒரு சந்தோஷம் என்றால் அதை விட மகிழ்ச்சி அவர் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராகக் கிடைத்தது.

சென்னை செல்கையில் ஒருமுறை நான் அவரது அலுவலகம் சென்றேன்.அவர் வரவேற்ற போது தான் எவ்வளவுக்கு ஒரு அன்னியப்புதியவனை அன்பு செய்ய முடியும் என்றெனக்குத் தோன்றியது.அவர் அலுவலகத்தில் உடன் பணி ஆற்றுகிற பெ.கருணாகரன்,தோழி இவள்பாரதி ஆகியோரை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.சற்று நேரம் உரையாடிய பின்னர் அதிஷா வினோவையும் அங்கே தான் முதன்முதலில் சந்தித்தேன்.அவர் எனக்கு அறிமுகமான பின் மதுரைக்கு எனக்கு அறிவிக்காமல் வரக்கூடாதுஎன்ற செல்லக்கண்டிஷனை மீறாமல் இருக்கிறார்.அனேக முறைகள் திண்டுக்கல்லோடு திரும்பி விடுவதாகவும் தகவல்.

ஒரு சந்திப்பில் உதயனும் நானும் கிட்டத்தட்ட ஏழுமணி நேரங்கள் தொடர்ந்து உரையாடினோம்.எம்ஜியாரில் ஆரம்பித்து எல்.எல்.ஆர் வரைக்கும் என்னென்ன பேசினோம் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.அவரது பெருந்தகுதி மனிதர்களை
உற்சாகப்படுத்துதல். எனக்கெல்லாம் அவரிடம் பேசியது ஹார்லிக்ஸை அண்டா அண்டாவாய்க் குடித்தாற் போல் இருந்தது.இதை மிகை என நினைப்பவர்கள் அவரோடு ஒரு மணி நேரம் பேசினால் நான் சொன்னது கம்மி என்று உணரலாம்.எல்லா மனிதர்களையும்பாசிடிவ்வாக அணுகுகிற ஒரு அபூர்வன் உதயன்.

உதயசூர்யன் கனவுகளின் நாயகன்.அவர் காணுகிற கனவுகளில் ஒரு சதவீதம் மெய்ப்பிக்கப் பட்டால் போதும்.அவ்வளவும் பகல் கனவல்ல. அர்த்தமுள்ள பிரம்மாண்டங்கள்.அவர் நடந்து கொண்டிருக்கிற சாலை அவரது கனவுகளை மெய்ப்பிக்கும் என்று அவருக்கு எவ்வளவு நம்பிக்கையோ அதை விட கூடுதல் சதவீதம் அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.நிறைய்ய உரையாடி இருக்கிறோம்.உள்ளன்போடு வரவேற்பதிலாகட்டும்,எதிர்பாரா நேரத்தில் அவர் பேச்சில் தெறிக்கும் நகைச்சுவை ஆகட்டும்..எதுகையும் மோனையும் சந்தமும் நயமுமாக அவரது தனித்த உரையாடல் பாணியாகட்டும்,உதயன் உதயன் தான்.

இன்னமும் ஈரம் குலையாத பால்ய மனமொன்றைத் தக்க வைத்துக் கொள்ளும்பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.அது உதயசூர்யனின் அனாயாசங்களில் ஒன்று.

தொடர்ந்து நட்பு
பாராட்டுவோம்.
ஆத்மார்த்தி

 

 

with பெ கருணாகரன், PG Saravanan, Kavitha Ramu, Palani Kumar
, Suriya Doss,Ganesa Kumaran, Raththika Pavazhamalli, Ambed Kar, Tamilarasi Dhandapani,
Vani Malligai
, MP Udayasooriyan, Manivannan Venkatasubbu, Uma Shakthi, Arrawinth Yuwaraj,
Thiyagu Panneer
, Selvi Shankar, Antony Roseline, Udayakumar Balakrishnan, Devaraj Santha
nam
, Deepa Nagarani, Kavin Malar கவின் மலர், Nila Raseegan, Ilangovan Balakrishnan,
Erode Kathir
, Mony Coimbatore, Ravi Sankar, Ra Kannan, Rajaram Suresh Babu, Uma Mohan,
Fathima Babu, Bharathi Krishnakumar, Amirtham Surya, Rc Mathiraj, Udhaya Kumar, Kavitha
Bharathy
, Usha Tvshankar, Discovery Book Palace, Madhumitha Raja, Riyas Qurana, Jahir
Hussain
, Ramaswamy M Chidambaram, Rettaivalsblog Tamil, Yuva Krishna, Ramanaa Chan
drasekar
, Kathir Bharathi, Rajeswari Periyaswamy, Abhishek Umakanthan, Sowba சௌபா
Soundarapandian
and Tamil Selvan Ethiraj.

Unlike · · · Share · Edit · Promote · October 5

Last Updated (Friday, 19 October 2012 10:49)