Post Views:
388
காணாப்பண்டம்
1.
மெல்ல அருகில் வந்து
கரங்களால் கழுத்தை வளைத்து
இன்னும் நெருங்குகையில்
மூச்சின் வெப்பம் முகத்தில் படரும்
முன்பே முடிந்து விடுகிறது
இந்த முறை
(ஒவ்வொருமுறையும்)
முத்தம் காண்பதற்கில்லை
கண்கள் மூடினாலொழிய
2.
முத்தம் என்பது நான்கு குளங்கள்
ஒன்றில் தொலை
இன்னொன்றில் அமிழ்
வேறொன்றில் அகப்படு
ஒன்றில் தொலை
3.
முத்துகையில் மரணமாவது
மரணிக்கையில் முத்தமாவது
வாய்த்தல் வரம்
சாலச்சுகம்