மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி


Exclusive! Manobala opens up on his web series debut, Mr Uthaman

 

மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா மூவிஸ் தயாரித்த ஊர் காவலன் இயக்குனர் மனோபாலா பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து கிளம்பி வந்து பல வெற்றி படங்களை கொடுத்த பிறகு ரஜினியை இயக்கினார். அந்த படத்தில் ரஜினி ராதிகா பங்கு கொண்ட பாடல்கள் பார்க்க அத்தன இயல்பாக இருக்கும் அதே நேரம் அவர்கள் இருவருக்கும் இடையில் அமைந்த காமெடி காட்சிகளும் இன்று வரை மனதில் நிற்பவை. மனோபாலா பாடல்களை படமாக்குவதில் வல்லவர் ராஜா மகள் ரோஜா மகள் பாடலை இசையும் குரலும் ஏற்படுத்திக் கொடுத்த அமானுஷ்யத்தை அதிகரித்து படமாக்கி இருப்பார் உண்மையில் திகில் படத்தில் பாடல்கள் பெரும் சவாலாக அமைபவை. மனோபாலா 90 களிலும் கவனிக்க தகுந்த படங்களை இயக்கினார்.

நடிகராக மாறி வென்ற இயக்குனர்களில் மனோபாலா தனித்துவமானவர். குணச்சித்திர கதாபாத்திரங்களில் இயக்குனர்கள் பலரும் வென்று இருக்கிறார்கள். ஹீரோவாக வெல்வது போலவே காமெடியனாக நிலைப்பதும் கடினம் தான். மனோபாலா ஒரு USER FRIENDLY காமெடியை சாத்தியம் செய்தார். அவரால் விவேக் வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு என பல நகைச்சுவை நட்சத்திரங்களோடும் பொருந்திப் போக முடிந்தது. எல்லா நடிகர்களுக்கும் இணக்கமான நண்பராக கூட ஒருவர் இருந்துவிட முடியும், திரையில் எல்லோரோடும் இடம்பெறுவதும் வலம் வருவதும் சாகசம். அதில் மனோபாலா சமர்த்தர்.

Best of alex pandian-movie-comedy - Free Watch Download - Todaypk

அவருடைய முகம் ஒரு சிரமமும் இன்றி புன்னகைக்க செய்து விடுவது. பிரயத்தனம் ஏதும் பெரிதாக செய்யாமல் அவரால் சிரிக்க வைக்க முடிந்தது. அரிதாரம் தேவையற்ற கோமாளி நடிகர் என்று அவரை சொல்ல முடியும். மனோபாலாவின் குரல் உண்மையில் அவருடைய கிரீடம் போல் அலங்கரித்தது. ஒரு மாதிரி கொஞ்சலும் தளும்பலுமாக அவர் பேசத் தொடங்கும் போதே கேட்பவர் மனம் மயங்க தொடங்கிவிடும். அலட்டிக் கொள்ளாமல் முக மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலமாகவே வெடிச்சி சிரிப்பை உண்டு பண்ணி விடுவதில் வி கே ராமசாமி, டனால் தங்கவேலு,சோ, ஜனகராஜ் போன்றவர்களின் வரிசையில் இடம்பெற தகுதியான நடிகர் மனோபாலா.

அலெக்ஸ் பாண்டியன், அரண்மனை-2, கஜினி உள்ளிட்ட பல படங்களில் மனோபாலாவின் வேடம் ஏற்றல் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத ஆச்சரியம்.நான் உங்கள் ரசிகன் என்ற தலைப்பில் தன் சரிதையை மனோபாலா எழுதியது புத்தகமாக வந்திருக்கிறது. அவர் எத்தனை நுட்பமான நண்பராக பலரோடும் பழகி வந்தவர் என்பதற்கான சாட்சிய மொத்தம் அந்த புத்தகம். நல்ல நடிகர், இயக்குனர், நடனம் கற்றவர், பாடுவதில் விருப்பம் கொண்டவர், சதுரங்க வேட்டை என்கிற வரலாற்றில் நிலைத்த திரைப்படத்தை தயாரித்தவர் என்று பலமுகம் கொண்ட மனோபாலா மக்கள் மனங்களில் நெடுங்காலம் நிலைத்து இருப்பார்.