வலைப்பூ

10 நனவிலி

சமீபத்துப்ரியக்காரி 10 நனவிலி தனிமையென்றவொன்று எப்படியிருக்குமென்று ருசித்துப் பார்க்கமட்டுமேனும் ஒரேயொரு கணம் அதனொரு துளி அதன் துளியினொரு துகள் அந்தத் துகளினொரு அணுவளவேனும் என்னுள்ளிலிருந்து வெளியேறிப் போய்வாயேன் என்று இறைஞ்சியிறைஞ்சிக் கேட்டனன். “அப்படியே” எனச்சொல்லிச் சென்றவள் திரும்பி வருமட்டிலும் தன்னகத்தின் வாயிலில்… Read More »10 நனவிலி

9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9 தானற்ற வேறொருவள் வேறு வேறு மாந்தர்க்கு          வெவ்வேறு முத்தங்கள்    உண்டெனக் கருதுவதாயின்            ஒற்றைத் தருணமும்   எனக்கு வேண்டாம்        … Read More »9 தானற்ற வேறொருவள்

8 ஒன்றேயொன்று

சமீபத்துப்ரியக்காரி 8 ஒன்றேயொன்று உன் கண்களில் சதா கனன்றுகொண்டிருக்கிற காலகால ஒளியை மட்டுப்படுத்திய பின் தொடங்கும் முடிவற்ற இருளின் பூர்ணாகதம் நான்

7 பொன்-பொழுது-தோன்றல்

7 பொன்-பொழுது-தோன்றல்      சமீபத்துப்ரியக்காரி ஒரு மைதுனத்தின் பாதியில் நீ வந்து சேர்கின்ற அனிச்சையென்பது இவ்வாறானது. கவனிக்க மறந்த கொதி பொங்கி எரிதலை அணைத்து வைக்கிற பாலினொரு வெண்கோடு மெல்லக் கரைதாண்டிக் கூடத்திற்கு வந்து சேர்கையில் கூடவே அழைத்து வரும்… Read More »7 பொன்-பொழுது-தோன்றல்

6 பழைய

சமீபத்துப் ப்ரியக்காரி 6 பழைய அன்பே உன்னால்   உன்னை வெளிப் படுத்த முடியாத போது நானிந்தப்ரபஞ்சத்தை இரண்டாகக் கிழித்தெறிவேன். அதன் பின் எல்லாமும் இரண்டாய் மாறும். நீ யாருடைய கண்களுக்குத் தென்பட விரும்பவில்லையோ அவர்கள் ஒரு உலகத்தில் தள்ளப்படுவார்கள். அதன் பெயர்… Read More »6 பழைய

சமோசா

குறுங்கதை சமோசா திடீரென்று அவனுக்குத் தோன்றியது. ஆகச்சிறந்த சமோசா எது..? உலகின் உத்தமமான சமோசாவைத் தேடத் தொடங்கினான். சமோசா கிடைக்கும் அத்தனை நாடுகள் நகரங்கள் என எல்லாவற்றையும் அலசித் தீர்த்து விட்டான். சமீப வருடங்களில் அவனுடைய பேருணவாக பெருந்துயரமாக தீராக்கனவாக நில்லாச்சொல்லாக… Read More »சமோசா

இரா.முருகனின் சிறுகதைகள்

வருகிற 12 மார்ச் சனிக்கிழமை மாலை நேரலை/நிகர்மெய் நிகழ்வாக ஒரு இலக்கியக் கூட்டம். இதனை முன்னெடுத்திருப்பது “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” எனும் இணையக் குழுமம். எழுத்தாளர் இரா.முருகனின் சிறுகதைகள் குறித்து நான் உரையாற்ற இருக்கிறேன். முழுவிவரங்கள் விரைவில் வாழ்தல் இனிது… Read More »இரா.முருகனின் சிறுகதைகள்

காலர் ட்யூன்

காலர் ட்யூன் குறுங்கதை ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். எதிர்பாராத சந்திப்பு. பேச்சு எங்கெங்கோ சென்று அந்த புள்ளியில் நின்று விட்டது. “ஜெயன்அப்பல்லாம் நீ ஒரு பாட்டு ரொம்ப அழகா பாடுவே..எனக்காகவே பாடுவியே அதைப் பாடேன்”. “எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையே”… Read More »காலர் ட்யூன்

பின் ஸீட்

குறுங்கதை பின் ஸீட் அந்த மருத்துவமனை மூடுவதற்கான நேரமாகி விட்டிருந்தது. சாயங்காலம் நாலு மணிக்கு முதல் டோக்கன் அழைக்கப்பட்டது. இப்போது மணி ஒன்பது முப்பத்தைந்து. ஐம்பத்து மூன்று பேர் டாக்டரை தரிசித்து விட்டுத் திரும்பியாயிற்று. இப்போது உள்ளே சென்றிருப்பவர் ஐம்பத்து நாலு.… Read More »பின் ஸீட்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்