வலைப்பூ
சாலச்சுகம் 4
தெ வி ட் டா த தெ ள் எனக்கு வேண்டியதெல்லாம் தலைமறைவுக்கென யாருமறியாத ஓரிடம் மனித நுழைதல் நடைபெற்றிராத ஆழ்வனம் ஆங்கோர் கனமரம் கிளைகளூடாக ஓர் குடில் உள்ளொரு படுக்கை அதில் முடங்குகையில் மேலே போர்த்தவொரு கம்பளி போலவொரு மனசு சாலச்சுகம்
சாலச்சுகம் 3
மோனத்தவம் 1 மேதமையோவென்று நினைத்திருக்கக் கூடும் இத்தெய்வம் முன்னின்ற தேவகணம் வேண்டிக் கொள்வதற்கு ஏதும் தோன்றாத பேதமை என் மோனம். 2 விபத்தில் வெட்டுண்ட கரம் இன்னுமிருக்கிறாற் போலவே அவ்வப்போது பாவனை செய்யும் பழைய காலத்து ஞாபகக் கூச்சம் 3 கிணற்றில்… Read More »சாலச்சுகம் 3
சாலச்சுகம் 2
___________________________________________________________________ 1. நான் கேட்கவேயில்லை ஆனாலும் இரண்டு மனம் வாய்த்திருக்கிறது. ஒன்று நினைத்து வாடுகிறது மற்றது அதற்காக நொந்து கொள்கிறது. 2 எந்தப் பாவியோ நான் அருந்துவதற்காக வைத்திருந்த விஷத்தில் தண்ணீரைக் கலந்துவிட்டிருக்கிறான் 3 நீங்கள் அடைந்துவிட்டதாய் இறுமாந்து கொள்கிற அதே… Read More »சாலச்சுகம் 2
சாலச்சுகம் 1
அந்தக் குழந்தைக்கு முத்தமிடத் தெரியவில்லை. நீட்டிய கன்னங்களில் வெறுமனே தன் வாயைத் தீற்றுகிறது. இவ்வுலகின் கச்சித முத்தங்களுக்கான பேரேட்டில் அந்தத் தீற்றல் இடம்பெறுமாவெனத் தெரியாது. என்றபோதும் கொடுக்கத் தெரியாத முத்தம் கால்தடம் பாவாத பெருவனம் போல அது சாலச்சுகம்.
ஓய்தலென்பது
சிக்னலில் யாசித்தபடி வருகிற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட கரன்ஸி காகிதத்தை உற்றுப்பார்க்கிறார். யாசிக்கையில் வழக்கமாய்க் கிடைக்கிற பணங்களைவிடவும் பேரதிகமான அதன் மதிப்பை மீண்டுமீண்டும் சரிபார்க்கிறார். நடுங்கும் கரத்தால் அதனைத் தன் ஏதுமற்ற உடலில் எங்கனம் பத்திரம் செய்வதெனத் திகைத்தபடி ஒரு… Read More »ஓய்தலென்பது
ஆர்.எஸ். சிவாஜி
இன்று ஆர்.எஸ். சிவாஜி அவர்களின் பிறந்த நாள். முகப்புத்தகத்தில் அபூர்வ சகோதரர்களில் ஆர்.எஸ்.சிவாஜியும் ஜனகராஜூம் பங்குபெறக் கூடிய வரலாற்றுச் சிரிப்பு மிக்க காட்சியை எடுத்து எழுதி சிவாஜி அவர்களது பரிணாமத் திறனைக் குறித்த பதிவொன்றை எழுதியிருந்தேன் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில். அதைப்… Read More »ஆர்.எஸ். சிவாஜி
ராதாரவி
(தினத்தந்தியில் வெளியான கட்டுரை) ரா தா ர வி அப்பா நடிகவேள். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என ஊரே பாராட்டியது. எம்.ஆர்.ராதாவின் மகன் என்பது பெரிய பலம் தான் எனினும் இந்தப் பெருமிதமே அவர் கடக்க வேண்டிய தூரத்தில்… Read More »ராதாரவி