இன்றைய கவிதை
வாழ்வாங்கு
கதாபாத்திரங்கள் இரண்டும்
தமக்குள் காப்பாற்றிக் கொண்டு
உலவும் ரகசியங்கள்
அவர்தம் கதை எழுதும்
எனக்கே தெரிவதில்லை
வாழ்வே
பாதசாரி
அகநதி கவிதைத் தொகுதி
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 80
பாதசாரி எழுதுபவை தன் மனத்தோடு தொடர்ந்து உரையாட முற்பட்டு கொண்டே இருக்கும் கவிதைகள். எதையும் காண்பதோ, அறிவதோ, அதைச் சொல்லுவது என எந்த நோக்கமும் இல்லாத உணர்தல்கள் கவிதையாக உருப்பெறுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இக்கவிதைகள் மொழியினூடாக ஒரு அபூர்வமான, வியப்பற்ற வியத்தலை வாசகனுக்குச் சாத்தியம் செய்து தருகின்றன.