அன்பான யாவர்க்கும்
தாமரை பாரதியின் கவிதைத் தொகுதிய் உவர்மணல் சிறுநெருஞ்சி, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக நாளை வெளியிடப் பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு நேரில் வந்து கலந்து கொள்ள இயலாத சூழல். வரவேண்டும் எனப் பெரிதும் முயன்றேன். ஆனாலும் முடியவில்லை. நூல் வெளியீட்டு விழா இனிதே நடக்கவும் நூல் சிறக்கவும் அவருக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்
தாமரை பாரதியின் இரண்டாவது கவிதை நூல் இது.
முன்னது தபுதாராவின் புன்னகை. எப்போதுமே கவிதைத் தொகுப்பு என வருகையில் ரெண்டாவது புஸ்தகத்தைத் தான் உற்று நோக்குவர். என்னென்ன என்று கடுமையாய்ப் பார்ப்பது கவிஞர் மனவடிவம். இந்தத் தொகுதியை முழுவதுமாகப் படித்து விட்டேன். தன் முதல் தொகுதியிலிருந்து நெடுந்தூரம் கவிதைகளின் வழி அடைந்திருக்கிறார் தாமரைபாரதி என்று தான் சொல்ல வேண்டும். இந்தத் தொகுதியின் பல தேர்ந்த கவிதைகள் காலங்கடந்து நிற்பவையாக எனக்குப் படுகின்றன.
சென்னைவாசிகள் இலக்கிய அன்பர்கள் புத்தக நேயர்கள் கவிதை விரும்பிகள் யாவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
விழா சிறக்கட்டும் நண்ப!
வாழ்தல் இனிது