சாலச்சுகம் 7

                                                      கில்லட்டின்


நள்ளிரவைப் போல்
நசநசத்த மழை மறப்பதற்கில்லை
உடலுருட்டிக் குலுக்கியபடி
உலர்ந்த இடம் தேடி அலைகிற
வளர்ப்பாரற்ற நாயின் கண்புரையெனக்
கசிந்த பொழுது
தன் இருப்பை எங்கனமேனும்
நிறுவிடத் தவிக்கும் புதியவனின்
தீரா ஆசையெனப் பசி
துண்டித்த இடத்திலிருந்து
ஒத்திசையவியலாது அதிர்கிற உடலை
இறைத்தும் கைக்கொண்டுமெனப்
பின்னால் அலைவது குறளி
சாம்பல் எரிய நீர்த்தெரிகிற
சுடருடல் சன்னம்
ப்ரியத்தின் உதடொளிர்தல்கள் விஷவிஷங்கள்
காலம் என்ப ஆட்காட்டி
குறைவதற்கேதுமற்ற போது
எஞ்சுதல் யார்க்கும் எளிது.
ஞாபகம் இடம் மாறி அமரும் பறவை
உறையிலிட்ட வயலினின்
இசைப்புழுக்கம் மேலதிகம்
செய்த அன்பு
சாலச்சுகம்