என்
வாழ்வின் நோக்கம்
ஒன்றே ஒன்று தான்.
எப்படியாவது
உன்னைக் கண்டுபிடித்தே ஆவது.
அதன் பின்,
வேறேதும் நோக்கமில்லை.
கண்டுபிடித்த உன் முன்
அந்தக் கணத்தின் என்னை
நிறுத்தி வைப்பதோடு
அந்த நோக்கம் நிறைந்துவிடும்.
எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி
அந்தத் தோன்றலை
நீ கையாள்கிற அழகைக் கண்ணுற வேண்டும்.
கனியை ஒருவனுக்கும்
குன்றொன்றை அடுத்தவனுக்கும்
சூசகமாய்ப் பகிர்ந்தளிக்கிற
சர்வவல்லமையை வியந்துகொண்டே.