நடை உடை பாவனை 2


  நடை உடை பாவனை 2
துப்பாக்கியும் தோட்டாவும்


துப்பாக்கியின் வருகை வரலாற்றைத் திருத்தி எழுதியது. பல வெற்றிகளை விரைவு படுத்தியது. அழகான ஆயுதம் துப்பாக்கி.
துப்பாக்கி எல்லோருக்கும் கிடைத்துவிடும் பண்டம் அல்ல. எல்லா இடங்களிலும் கிடைக்கவே கிடைக்காது. ஒருவர் துப்பாக்கிக்காக விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எக்கச்சக்கமான ஃபார்மாலிட்டிகளைத் தாண்டி அதனைப் பெறும்போது வாழ்க்கையே வெறுத்திருக்கும். ஒருவர் விண்ணப்பிக்கிறார் என்றால் உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். தேவா பொழச்சிருவான் என்று தேவா சொன்னால் போதாது, இளையராஜா ஏஆர்ரகுமானெல்லாம் சொல்ல வேண்டும். இன்ன மாதிரி இவர் துப்பாக்கி கேட்கிறார், கொடுக்கலாமா என்று கேட்காமல் இன்னார் நல்லவரா கெட்டவரா, எத்தனை நாளா நல்லவர், வேற எதுலயாச்சும் கெட்டவரா, குற்றப் பின்னணி கொண்டவரா, அப்படியானவர்களுடன் எதேனும் தொடர்பு கொண்டவரா, சிவில் க்ரிமினல் வழக்குகள் எதேனும் நடத்தி வருகிறாரா, அப்படி வழக்குகள் எதேனும் முடிந்து தண்டனை பெற்றவரா, அப்படி வழக்குகளில் தொடர்புடையவரிடம் எதேனும் உறவு அல்லது திருமண வழி பந்தம் கொண்டவரா, நல்ல மனநிலை கொண்டவரா, என்பது வரை பலப்பல கேள்விகளைக் கடந்த பிறகு, இரண்டு மூன்று அரசுத் துறைகள் ஆட்சேபனை இல்லை என்று சான்றிதழும் கொடுத்த பிறகு, வனம் சார்ந்த வனமிருகங்கள் சார்ந்த பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளுபவர்கள், உண்மையாகவே உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்பதற்கு அப்பால் நீங்க துப்பாக்கி வச்சுக்கலாம் என்கிற அனுமதிதான் முதலில் கிடைக்கும். பிறகு அதற்கு அப்பால் பயிற்சி எடுத்து சுடத் தெரிந்து கொண்ட பிற்பாடு, துப்பாக்கி வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

   நிஜம் இவ்வாறென்றால் சினிமாவில் எத்தனையோ அதீதங்களைத் துப்பாக்கி எனும் ஒரே ஒரு விசயத்தைச் சுற்றி ஆயிரம் வினோதங்கள் உண்டென அறிக.கைக்கடக்கமான ரிவால்வார் பிஸ்டல் வகையறாக்கள் தொடங்கி டபடபவென்று சுட்டுத் தள்ளும் மெஷின் கன் வரைக்கும் சினிமாக்களில் துப்பாக்கியின் பங்கேற்பு ஸ்பெஷலானது. க்ளைமாக்ஸில் துப்பாக்கி எடுத்தால் படம் ஓடாது என்றெல்லாம் முந்தைய காலங்களின் சினிமா செண்டிமெண்ட் இருந்தது. சினிமா போஸ்டரில் துப்பாக்கியுடன் யாராவது தோன்றும் படங்களுக்கு ஆரம்பத்திலேயே  நல்ல கூட்டம் இருக்கும் என்பதும் இன்னொரு விசேசம். குடும்பக் கதைகளில் கூட எப்படியாவது ஒரே ஒரு ஸீனில் துப்பாக்கியை நுழைத்து போஸ்டரில் அதைத் தோன்றச் செய்து மக்களை ஏமாற்றித் தானும் ஏமாந்த சில சினிமாக்களும் வந்தன. ஜேம்ஸ் பாண்ட் உள்ளான சர்வதேசப் படங்களில் துப்பாக்கி நல்லதொரு தளபதி. தமிழில் துப்பாக்கிப் படங்கள் செய்து கொடுத்த உணர்வு கலந்து கட்டியானது.
 
சினிமாவில் துப்பாக்கி படுகிற பாட்டை நினைத்து, நிஜத் துப்பாக்கி பார்த்தால் கண்ணீர் விட்டு அழும். தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும்.

 மைக்கேல் மதன காமராஜனில் குஷ்பூ கையில் இருக்கும் துப்பாக்கியைத் தட்டி விட்டபடி சம்மர் சால்ட் எல்லாம் அடித்து சண்டையிடுவார் பாட்டி.அதைத் தாண்டிய கிளைமாக்ஸின் போது வில்லன் மற்றும் அவருடைய மகன் இருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியை பறித்து விடும் நாலுவேடக் கமலின் தந்தை அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்றபடியே அதே வில்லனிடம் ஒரு துப்பாக்கியைத் திரும்பக் க்கொடுக்கும் போது நமக்குப் புற்கள் அரிக்கும்.
.
மனிதன் படத்தில் ரஜினியார் தன் உடலைத் துளைத்த துப்பாக்கி குண்டை வெளியே எடுக்க தனக்குத் தானே பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பி கொண்டு சுய ஆப்ரேசன் செய்து கொள்வார்.ஜெண்டில் மேன் படத்தில் அர்ஜூன குண்டை வெளியே எடுப்பதற்கான மருந்துகளை வாங்கிக் கொண்டு ரகஸிய இடம் வந்து சேரும் கவுண்டமணியைத் தொடர்ந்து வந்து அப்போது தான் குண்டு எடுத்த உடம்பு என்பதை கொஞ்சமும் மதிக்காத மதுபாலா அர்ஜூனை பேசியே டயர்டாக்கி டார்ச்சர் செய்வார்.இதுக்கு அந்த டுபாக்கியே பரால்ல போ என்று அழாக்குறை ஆவார் அர்ஜூன்
.5 Kollywood films which had gun-wielding heroes in its first look posters |  The Times of India
அபூர்வ சகோதரர்களில் ஒன் பை ஃபோர் வில்லனாக வருவார் ஜெய்சங்கர் அவரது வீட்டுக்கு வெவ்வேறு நோக்கங்களுடன் செல்வார்கள் நெட்டை மற்றும் குள்ள கமல் இருவரும். கவுதமியை கதை பிரகாரம் காதலிப்பதற்காக ராஜா கமல் முயன்றுகொண்டிருக்கும் அதே நேரம் அசந்து தூங்கும் ஜெய்யை எழுப்பி அவர் முன் டுபாக்கியை நீட்டுவார் அப்புகமல்.அவரை யார் என்ன என்றெல்லாம் தன் வக்கீல் சம்பிரதாயப்படி விசாரித்து விட்டு டீல் பேசுவார் ஜெய் என் தப்பை ஒத்துக்குறேன் என்னை சுட்டுறாதே என்பார்.ஆனால் அவரை தப்பை ஒத்துக்க சொல்லவே மாட்டார் கமல் அவருக்கு என்ன ரிப்ளை தருவார் என்றால் முதல்ல உன்னை நெத்திப் பொட்ல சுடலாம்னு இருந்தேன்.இப்ப குத்தத்தை ஒத்துக்கிட்டதால குறைந்த பட்ச தண்டனையா தொப்புள்ல சுடட்டுமா என்பார். இந்த ஆஃபரில் திருப்தி அடையாத ஜெய் பேசிக்கொண்டே கமலிடமிருந்து டுபாக்கியை பிடுங்கி அவரையே சுடுவார். ஆனால் குண்டூ அவரையே துளைக்கும் சிரிக்கும் கமல் சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும் என்பார்.உடனே ஆத்திரமாகி அதைத் திருப்பி மறுக்கா சுடுவார் ஜெய் உடனே மறுக்கா அவரையே குண்டு துளைத்து டபுள் டக்கராகி உயிரை விடுவார். நியாயமாக ஒரே ஒரு கேள்வி ஏன் அப்புக்கண்ணா சர்க்கஸ்துப்பாக்கில நெஜக்குண்டு போட்டு சுடுவாங்களா யாராச்சும் என்று கேட்கவே மாட்டார் பாவப்பட்ட ஜெய்

தாய்வீடு படத்தில் அத்தனை நேரம் கட்டிப்போட்டிருக்கும் ஜெய்யை நாய் அவிழ்த்து விடும் வரை அங்கே வராத விஜய்குமார் மற்றும் தேங்காய் சீனு இருவரும் அவர் கத்தியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி தண்ணீரில் குதிக்கும் வரை தன் கையில் இருக்கும் டுபாக்கியை சும்மா வைத்திருப்பார் விஜய்குமார் ய் சேஃப்டியாக தண்ணீருக்குள் முங்கியதும் குறிபார்த்து தண்ணீரின் மேல் சுடுவார். நமக்கு ப்ளீஸ் எங்களை சுடுங்க அருண்விஜய்டாடி என்று கத்தத் தோன்றும். ஆதவன் படத்தில் எக்கச்சக்க சோதனைகளுக்கு அப்பால் ஜட்ஜ் வீட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளுக்குள் ஒரு துப்பாக்கியின் பாகங்களை எடுத்து தன் கையே தனக்கு உதவி என்று தானே துப்பாக்கி அசெம்பில் செய்து கொள்வார் சூர்யா. மெட்டல் டிடக்டரை ஏமாற்ற பூசணிக்காய் போதும் என்று சொல்லப்படுகிற காட்சியில் டெக்னாலஜி தன் தலையிலடித்துக் கொண்டு அழும்.

தமிழ்ப்பட ரசிகன் நெடுங்காலமாக ஆறுகுண்டு எண்ணி ஆறுதலடையும் ஆறுமுகமாகவே இருந்தான். அதுவே ஒரு பொய் டுப்பாக்கி, அதில் விரல் விட்டு ஆறுவரை எண்ணிவிட்டு ஆறுதல் அடைவான்.சில படங்களில் அடுத்தடுத்த ஸீட்களில் அமரவாய்க்கும் அரைக்கண் அன்பர்கள் ஒருவர் அஞ்சு தான் ஏழுதான் என்று ஆறின்றி அடித்துக் கொள்வர். இண்டர்வல்லில் ஆறு மனமே ஆறு பாடல் ஒலித்த பின்னரே அடங்குவர்.,
 காலம் நவீனமடைந்து ஒரு கேட்ரிட்ஜில் ஆறுக்கு அதிகமான தோட்டாக்கள் வந்த போது முதலில் அப்படியான பழைய ரசிகர்கள் ஏமாந்தார்கள்.ஒரு கேட்ரிட்ஜ் தீர்ந்ததும் அதை ஸ்டைலாக அகற்றி இன்னொன்றை பூட்டிக் கொண்டதை விரும்பாமல் தான் விரும்பினார்கள்.

நான் பார்த்ததிலேயே கடியான துப்பாக்கி சீன் இந்திப் படமொன்றில் மிதுன் சக்கரவர்த்தி வில்லனை சுடுவதற்காக எதன் பின்னால் ஒளிந்து கொள்வார் தெரியுமா..?ஒரு அவர் சைக்கிளின் பின் சக்கரத்தின் பின்னால் ஒளிந்து கொள்வார். நல்ல வேளை அது நான் பிறக்கும் முன்பே வந்த படங்களில் ஒன்று. எத்தனை நாள் அதை எண்ணி எண்ணிக் கலங்கினேன் என்று எனக்குத் தான் தெரியும்.
World Bicycle Day: From bringing Shah Rukh-Salman Khan close to saving Mithun  Chakraborty's life, 'iconic' cycle moments
படிக்காதவன் படத்தில் ரஜ்னியுடைய அண்ணர் சிவாஜி வக்கீலுக்குப் படித்து ஜட்ஜாகி பிறகு தன் தம்பி ரஜ்னியைக் காப்பாற்றுவதற்காக மறுபடி வக்கீலாகி வாதாடுவார். பூர்ணம் விஸ்வநாதனைக் கொன்றது ரஜினியல்ல ஜெய்சங்கர் தான் என்று கஷ்டப்பட்டு நிரூபித்த பிறகு கடுப்பாகும் ஜெய் ஆமாம் அந்தக் கொலையை நான் தான் செய்தேன்.இப்ப இன்னொரு கொலையும் செய்யப் போறேன் என்று கோர்ட்டில் தன் கோட்டுக்குள்ளிருந்து துப்பாக்கியை எடுத்து சிவாஜியை சுடுவதாக எண்ணி கோணக்க மாணக்க சுடுவார் உடனே சிவாஜி எதோ ஒரு பக்கம் பல்டி அடிப்பார். அப்போது குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த ஜெய் அங்கே இருந்து அதே குறி தப்பிய டுபாக்கி சகிதம் என்னை யாராவது தடுத்தீங்க சுட்டுருவேன் என்று அதை நீட்டியபடியே அங்கே இருந்து தப்பிப்பார். அவரை எதிர்த்து வரும் ஆறு போலீஸாரிடம் ஆறு துப்பாக்கிகள் இருக்கும். அதை அவர் முன் நீட்டி இருப்பார்கள்.ஆனால் அவர்கள் பயந்து அவற்றைப் பயன்படுத்தாமல் ஜெய்க்கு வழி வேறு விடுவார்கள்.நமக்குத் தான் இடைவேளையில் தின்ற பாப்கார்னெல்லாம் பற்றியெரியும்

Kamal Hassan - Tamil actor: Vettaiyaadu Vilaiyaadu
கிட்ட வந்தா சுட்டுருவேன் சுட்டுருவேன் என்று தன் கையில் துப்பாக்கி இருந்தும் நடுநடுவே நடுநடுங்குவார் சிறுவில்லன். அவரைப் பார்த்துக் கொஞ்சமும் நடுங்காமல் நடை போடுவார் கேப்டன். கேப்டனைத் தடுத்து நிறுத்தவாச்சும் உபயோகப் படாதா என்று சுட்டே விடுவார் சிறுவில்லன். அந்தத் தோட்டா மெல்ல வேகமாகி வேகமாக விரைந்து கேப்டனை நெருங்கி அவர் சட்டையில் இருக்கும் சாமிக்காசு மீது படும்.பட்டதும் அப்படியே ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி செமை வேகமாய்த் தன்னை சுட்ட துப்பாக்கியைத் தன் கையால் தாங்கி இருக்கும் சிறுவில்லன் நெஞ்சில் பாய்ந்து அவரை மட்டையாக்கும்.துப்பாக்கியா இருந்தாலும் கேப்டனை சுடமுடியாது.சுடக் கூடாது.சுட்டா வில்லன் நீ தாண்டா சாவே என்று துப்பாக்கிநாதரின் மைண்டவாய்ஸ் கேட்டுத் தன் பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருக்கும் ரசிக சகாவின் கன்னத்தில் போட்டுக் கொள்வான் ரசிகன் இந்த விஜயகாந்த் படத்தின் பெயர் மறந்து விட்டது.

பாட்ஷா படத்தில் மாணிக்க பாட்ஷாவும் பரிசுத்த மார்க்க ஆண்டனியும் அவரவர் கெத்து அவரவர் துப்பாக்கி என்று மும்பையில் திரிவார்கள். – ராமய்யா பாட்டு முடிந்ததும் ரஜினி என்று நினைத்து ஒரு கொடும்பாவி பொம்மை அல்லது வயல் பூச்சாண்டி ஏதோ ஒன்றை ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தாறு தோட்டாக்களை வீணடித்துச் சுடும் காட்சி திகிலாக இருக்கும். அதே பாட்ஷாவில் நீ இங்கே பாரு கண்ணா என்பார் ரகுவரன். பார்த்தால் ஒரு உயரமான மொட்டை மாடியில் ஒண்ணு  இண்ட்டு துப்பாக்கி மனிதனும் உடனே நீ அங்கே பாரு கண்ணா என ரஜினியார் காட்டும் எதிர் சைட் மாடியில் பார்த்தால் மூணு இண்ட்டு துப்பாக்கி மனிதர்களுமாக வரும் காட்சி -மாடிகளில் இருக்கும் ரெண்டு சைடை சேர்ந்த நாலு பேருக்குமே அப்போது தான் வியர்க்க ஆரம்பிக்கும். பாட்ஷா மாணிக்கத்துக்குள் மறைந்து வாழும் படத்தின் ஆரம்ப எபிஸோடில் இந்திரன் எனும் பெயரிலான ஆனந்தராஜர் ஒரே ஒரு காட்சியில் ஒரே ஒரு துப்பாக்கியைக் கையில் பிடித்தபடித் தோன்றுவார்,   யாரையும் சுடும் முன்பே ரஜினியிடம் செமை மாத்துவாங்குவார்.

சின்னவயதில் கேப்டன் ரொம்பப் பாவம்.அவரை எடுத்து வளர்த்து சத்ரியன் அலையஸ் பன்னீர் செல்வம் போலீஸ் ஆபீசர் என்றாக்கி அழகு பார்த்த அதே விஜயகுமாரிடம் கேப்டன் சென்று சொந்த வாழ்க்கையில் கஷ்டம்.இனிமே நா வேலைக்கு வர்ல மொதலாளி என்று தன் ராஜன் நாமா கடிஜம் கொடுக்கும் போது அவரிடம் போகாத செல்வம் வேணாம் செல்வம் ப்ளீஸ் அய்யோ தயவு செய் என்றெல்லாம் விஜய்குமார் கதறியும். மீறி வேலையை விட்டு வீட்டுக்குப் போய்விடும் கேப்டனே கொஞ்ச சீன் கழித்து மறுக்கா வந்து சேர்ந்து “ப்ளீஸ் ஸார் எனக்கு மறுக்கா வேலை வேணும். இதுக்கு முன்னாடி ஸீன்ல நான் வில்லன் கிட்ட போயி ஸவால் பண்ணிட்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும் அவரை நிற்க வைத்து இந்தா துப்பாக்கி ஷூட் இட் என்பார். ஒருதடவைக்கு ரெண்டு தடவை அவரே அப்டி சொல்கிறாரே என்று அந்த அறையில் இருக்கும் விஜய்குமாருக்கு யாரோ பரிசாய்க் குடுத்த ஷீல்டில் எங்கேயோ ரெண்டு இடத்தில் சுட்டு வைப்பார் கேப்டன் உடனே அவரை ஒரு அறை அறைவார் விஜயகுமார். “சுடுன்னீங்க எங்கேன்னீங்களா சுட்டேன் அடிக்கிறீங்களே இது நியாயமா என் வேலையை நான் தானே ராஜன் நாமா பண்ணேன்.நீங்களா பண்ணீங்க..?அதைத் தானே மறுக்கா திரும்ப கேட்குறேன். முடிஞ்சா தாங்க இல்லைன்னா போங்க ஏன் அடிக்கிறீங்க என்றெல்லாம் கேட்காமல் திகைச்சுப் போய் தீவாளி காசு தரப்படாத மாமூல் கான்ஸ்டபுள் ஒருவரைப் போலவே கடும்பரிதாபமாக நிற்பார் கேப்டன்.

Sathriyan Vijayakanth-Ilayaraja-Subhash-Manirathnam - YouTube
அப்படி நிற்பவரிடம் மூச்சே விடாமல் தன் டயலாக்கால் அவர் மனம் வெறுக்க வைப்பார் விஜய்குமார். நீ பழைய பன்னீர் செல்வம் இல்லை. நீ பழைய பன்னீர் செல்வமா இருந்தா ஷீல்டு ஜன்னல் வழியா வெளில போயிருக்கும் என்பார். அங்கே பாவம் என்னவென்றால் அந்த அறையில் விஜயகாந்துக்குப் பின்னால் மட்டும் தான் ஜன்னல் இருக்கும்.அது வழியாக ஷீல்டு வெளியே போக வேண்டுமென்றால் அதை எத்தனை தடவை துப்பாக்கியால் சுட்டாலும் போதாது,.கையால் எடுத்து கொண்டுவந்து  ஜன்னல் வழியாக நுழைத்து வெளியே எறிந்தால் மட்டுமே முடியும்.அதை எல்லாம் நினைத்து அடுத்த சீன் முழுக்க தன் குழந்தையிடம் அழுவார் விஜய்காந்த் அடுத்து வரும்  சீன் முழுவதும் “ஜிம் கண்டேன் ஜிம்மே கண்டேன்” என்றாகி இளையராசாவை “நீங்க இந்த சீன் முச்சூடும் போலீஸ் பேண்ட் வாத்தியம் மட்டும் வாசிங்க ப்ளீஸ் தேவைப்படுது” என்றாகி எல்லா எச்சர்சைசுவையும் செய்து  உடனடியாக உடல் ஃபிட்னெஸ் ஆகி இந்த முறை  முன் கூட்டியே  யூனிஃபார்ம் தரித்து அதே கமிசணர் விஜயகுமாரைப் பார்க்கப் போய் தன் கைத் துப்பாக்கியை மூணு முறை சுத்துவார். சென்ற முறை கேப்டன் போலவே தானும் மஃப்டியில் இருந்த  விஜயகுமார் இந்த முறை கேப்டனை போலவே தானும் யூனிஃபார்மில் இருப்பார் மேலும் அவர் எதுமே சொல்லாத போதும் கேப்டன் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் அதே பழைய ஷீல்டை ஒன்றுக்கு மூன்று தடவை சென்ற முறை சுட்ட அதே இடங்களில் மீண்டும் சுட்டுவிட்டு ஸ்டைலாக பார்ப்பார். எனக்கென்ன தெரியும் நான் வெறும் கேரக்டர்.நம்மளை இயக்குறது டைரக்டர் என்றும் சொல்லாமல் விஜயகுமார் அவரைக் கையும் கொடுத்துக் கட்டியும் பிடித்து வாழ்த்தி அரவணைப்பார். இதை போன முறையே செய்திருக்கலாமே என்று நமக்குத் தோன்றும்.பட் கேட்க முடியாது

கீழே வீழும் அடியாள் ஒருவனை ஓங்கி மிதிப்பார் பாலகிருஷ்ணா அந்த அடியாள் பாவம் அப்படியே வாழை மட்டை போலாகி சுற்றிக் கொண்டே மேலே வருவார் தன் நெஞ்சுக்கு வரும் அத்தனை தோட்டாக்களையும் அந்த வாழை மட்டை மீது பாயச்செய்வார் பாலைய்யா. இந்த உலகிலேயே தான் நடித்த படத்திற்கு வரமாட்டேன் என்று அழுது தவித்து அடம்பண்ணும் ஒரே நடிகர் என்று அன்னாரைச் சொல்கிறார்கள். ஆனாலும் ஆந்திராவில் பாலகிருஷ்ணாவுக்கு வெறிகொண்ட ரசிகர்கள் பலர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அரை மணி நேரக் கதை நகர்தல் முழுவதும் வேட்டைத் துப்பாக்கியைத் தொலைத்துத் தேடுவதாக அமைந்திருந்தது ரசிக்க வைத்தது.விக்ரம் வேதா வேட்டையாடு விளையாடு யுத்தம் செய் போன்ற பல படங்கள் யதார்த்தத்தின் வரம்புகளுக்குள் ஆனமட்டும் துப்பாக்கியின் கதைகளை திரையில் சொல்ல முயன்றன.

தமிழ் சினிமாவிலிருந்து துப்பாக்கியையும் தோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது.
அது காலகால பந்தம்.