வயதான காதுகள் – சிறுகதை
எஸ்.செந்தில்குமார்
இந்த வார ஆனந்த விகடனில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் வயதான காதுகள் என்கிற சிறுகதை வெளியாகி இருக்கிறது. மிக நேரான கதை. அற்புதமான கதாமொழி. அதை விடவும் மையப்பாத்திரத்தின் மனமொழியை வாசகன் பெற்றுக்கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் முகத்தில் அறையும் சொலல் முறை. அவசியம் வாசிக்க வேண்டிய கதை.
அவளது மனதுக்குள் தனக்குக் காது கேட்கவில்லையென்கிற வேதனை பதற்றத்தைத் தந்தது. அவளது கைகளும் கால்களும் லேசாக நடுங்கத் தொடங்கின. ஐம்பது வயதானால் காது கேட்காமல் போய்விடுமா என்று நினைத்தவளுக்கு தனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் ஐம்பது வயது வந்துவிட்டதே என்று தன் மேல் வெறுப்படைந்தாள். முத்துமீனாவின் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னுடைய காதுகளைப் பார்த்தாள். அவளது முகத்தைவிட காதுகள் இரண்டும் மிகவும் வயதான தோற்றத்தைத் தந்தது. உடனே அவற்றை வெட்டி எறிய வேண்டுமென்கிற கோபம் வந்தது அவளுக்கு