வலைப்பூ

பா.ராகவன்

பா.ராகவன் இன்றைக்கு பா.ராகவனுக்குப் பிறந்த நாள். நான் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே கல்கி இன்ன பிற இதழ்களில் எங்காவது அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருக்க வாய்த்த பெயர் ராகவனுடையது. மாபெரும் திமிங்கிலங்களின் காலத்தில் ஒரு குட்டி மீன் நீந்தியும் ஒளிந்து மறைந்தும்… Read More »பா.ராகவன்

4 கவிதைகள்

குடி வாசனை பற்றிய 4  கவிதைகள் 1 ஒன்றுக்கு மேற்பட வேண்டுமா இதைக் குடி 2 அந்தப் பறவை இங்கே தான் இருக்கிறது. அதே பறவை அங்கேயும் இருக்கிறது. இன்னும் சில இடங்களிலும் இருப்பேன் என்றபடி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதனருகாமையில்… Read More »4 கவிதைகள்

எனக்குள் எண்ணங்கள் 8

எனக்குள் எண்ணங்கள் 8 யுவராணி முதன் முதலாக யுவராணி நடித்த படம் என்று பார்த்தது ஜாதிமல்லி படத்தைத் தான். கம்பன் எங்கு போனான் பாடல் அதிரி புதிரி ஹிட். அதில் யுவராணியைப் பார்த்ததுமே மனசு ஹார்ட்டு இன்னபிறவெல்லாம் பறிகொடுத்தாயிற்று. நானொரு ரஜினி… Read More »எனக்குள் எண்ணங்கள் 8

அந்தாதி

1 இரு புறங்களிலும் கரமூன்றிச் சற்றுநேரம் சும்மா அமர்ந்துவிட்டுப் புறப்பட ஏதுவாய் ஒரு கல் இருக்கை யாருமற்று 2 யாருமற்று படபடக்கிற நேரங்கெட்ட தூறலின் துளிகளைத் தானியமென்றெண்ணி அமர்ந்தவிடத்திலிருந்து எழுந்தெழுந்து வேறிடத்தில் அமர்கிறது சாம்பல் வெண் பறவை. 3 பறவையின் ப்ரேதவுடல்… Read More »அந்தாதி

குமுதம் தீராநதி

குமுதம் தீராநதி இந்த {செப்டெம்பர் 2022} இதழில் கதை சொல்லும் கவுண்ட்டர்கள் என்ற தலைப்பில் சினிமா டிக்கட் கவுண்டர்களில் 80-90களில் காணக்கிடைத்த அனுபவச்சித்திரங்களை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது.  

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு மறுபடியும் முழுசாக ஒரு படம் பிடித்தது. எடுத்துக் கொண்ட கதையைப் பிரச்சார வாசனை ஏதும் இல்லாமல் சொல்ல முயன்று வென்றிருக்கிறார் மித்ரன். தனுஷ், ப்ரகாஷ்ராஜ், பாரதிராஜா மூவரும் ஒரு அழகான க்ரூப் ஃபோட்டோ… Read More »திருச்சிற்றம்பலம்

இசையின் முகங்கள்

ஷங்கர் மகாதேவன்   ஷங்கர் மகாதேவனின் குரல் மீது பெரிய மயக்கமெல்லாம் இருந்ததில்லை ஆனாலும் அனைத்துப் பாடல்களின் நிகழ்கணங்களிலும் வித்யாசமாகத் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தவை அவரது பாடல்கள். பிசிறேதுமற்ற ஒழுங்கும் தீர்க்கமும் எப்போதும் ததும்புகிற உற்சாகமும் அவர் குரலின் நிரந்தரங்கள்.… Read More »இசையின் முகங்கள்

பூவின் பூக்கள்

வண்ணதாசன் அந்நியமற்ற எழுத்தால் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்பவர். அவருடைய கதைகள் தோரணப் பூக்களைப் போல் பரிச்சயத்தின் தற்கணங்களாகப் பெருகுகின்றன. வாழ்வின் நிமிஷங்களை மனிதர்களைப் பார்ப்பதற்கு உகந்த பார்வைமானிகளை உற்பத்தி செய்துகொள்ளக் கற்பிப்பவை. சின்னஞ்சிறிய எவற்றையும் சட்டென்று கடந்து விடுவதிலிருந்து மீண்டும்… Read More »பூவின் பூக்கள்